விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆக்கி அடிமை நிலைப்பித்தனை*  என்னை இன்று, அவமே- 
  போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு*  புண்ணியர்தம்- 
  வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்* 
  நோக்கில் தெரிவ‌ரிதால்,*  உரையாய் இந்த நுண்பொருளே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன்பு  - முற்காலமெல்லாம்;
அவமே போக்கி - வீணுகப் போக்கி;
புறந்து இட்டது - வெளி விஷயங்சளிலே தள்ளிவிட்டு வைத்தது;
என்பொருளா - என்ன நிமித்தாக?;
புண்ணியர் தம் - (தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கியசாலிகளுடைய;

விளக்க உரை

உரை:1

கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேனை இன்று திருத்திப் பணிகொண்ட தேவரீர் இதற்கு முற்காலமெல்லாம் இந்த சேஷத்வரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணாக விஷயாந்தரங்களிலே அகல வைத்திருந்ததற்கு என்ன காரணம்? இன்று இங்ஙனே திருவுள்ளம் பற்றும்படியாக என்னிடத்தில் என்ன ஸுக்ருக முண்டாயிற்று? ஒன்றுமில்லை; அப்படியிருக்கச் செய்தேயும் தேவரீர் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையைக் கொண்டே யன்றோ இன்று ஆட்படுத்திக் கொண்டது. ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபையுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! ஆறிந்த தேவரீரே அருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.

உரை:2

 வெகுகாலம் இந்த உடலும் ஆத்மாவும் ஒன்று என்றே எண்ணியிருந்தேன்; அதன் பின்னர் அவை வெவ்வேறு என உணர்ந்த போதிலும், இந்த ஆத்மாவும் ஸர்வேச்வரனும் ஒன்று என எண்ணியிருந்தேன்(ஈச்வரோ அஹம்); அதன் பின்னர் வெகுகாலம் உலக இன்பங்களில் திளைத்தபடி இருந்தேன். இப்படி இருந்த என்னை, அவற்றில் இருந்து நீவிர் (எம்பெருமானார்) விடுவித்தீர். அதனைத் தொடர்ந்து, என்னை எம்பெருமானுக்கு அடிமையாக்கி, அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்யும்படி பணித்தீர். இது நாள்வரை எனது உயிரை மற்ற விஷயங்களில் நான் வீணாக்கும்படிச் செய்து விட்டு, நீவிர் பேசாமல் நின்றது ஏன்? (நான் அறியேன்). மிகுந்த நன்மை உள்ளவர்கள் மற்றும் “பொலிக பொலிக பொலிக” என்று கூறும் ஸ்வாமி நம்மாழ்வார் போன்றவர்கள் ஆகியோர்களின் வாக்கில் எப்போதும் நிலைக்கும் எம்பெருமானாரே! எம்பெருமானின் லீலையானது என் போன்றவர்களை மோக்ஷம், பந்தம் ஆகிய இரண்டிலுமே ஈடுபடுத்திவிடும். ஆனால் உமது கருணை என்பது மோக்ஷத்தில் மட்டுமே ஈடுபடுத்தவல்லது அல்லவோ? இப்படிப்பட்ட மேன்மை உடைய உமது சிந்தனை (ஏன் என்னை இத்தனை நாள்கள் திருத்தாமல் காலம் கடத்தினீர் என்ற கேள்விக்கான விடை) எத்தனை ஆராய்ந்தாலும் அறிவதற்குக் கடினமே ஆகும். ஆகவே இந்த நுட்பமான சிந்தனை குறித்து நீரே எனக்குக் கூறவேண்டும்

English Translation

O Ramanuja, praised by blessed ones! Today you have made me your servant, such is your grace, But why did you let me go my way and waste my life all these years? Alas I cannot understand the subtie sense in this, Pray tell me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்