விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்* 
  குடிகொண்ட கோயில் இராமாநுசன் குணங்கூறும்,*  அன்பர்-
  கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளங் கனியும்நல்லோர்* 
  அடிகண்டு கொண்டு உகந்து*  என்னையும் ஆள‌வர்க்கு ஆக்கினரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குணம் கூறும் அன்பர் - திருக்குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய;
கடிகொண்ட மா தாள் மலர் - மணம்மிக்குச் சிறந்த பாதாரவிந்தங்களில்;
உள்ளம் கலந்து - நெஞ்சு பொருந்தி;;
கனியும் - ஸ்நேஹித்திருக்கின்ற;
நல்லோர்- மஹாநுபவர்கள்;

விளக்க உரை

இந்தப் பூமி முழுவதும் பரவியுள்ள புகழ் கொண்டது எது என்றால் இராமாயணம் ஆகும். இத்தகைய இராமாயணம் என்னும் கரை புரண்டு ஓடும் பக்தி ரஸத்தை, தானே ஒரு கோவில் போன்று அவதரித்து, தன்னுள் வைத்திருப்பவர் உடையவர் ஆவார். பரமபுருஷனுக்கு வைகுண்டம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை போன்று இராமாயணத்தின் இருப்பிடமாக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை, அவர் அவதரிப்பதற்கு முன்பே பலரும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்தனர். அவர்கள் யார் என்றால் – “கலியும் கெடும் கண்டு கொண்மீன்” என்று உடையவர் பிறப்பால் கலிகாலம் சீரடையும் என உபதேசம் செய்த ஸ்வாமி நம்மாழ்வார்; அவர் கூறியபடி உள்ள விக்ரஹத்தை மனதால் ஆராதித்த ஸ்வாமி நாதமுனிகள்; “ஆம் முதல்வன்” என்று வியந்த ஸ்வாமி ஆளவந்தார் – ஆகியோர் ஆவர். இப்படிப்பட்ட இவர்களுடைய பெருமை மிகுந்த திருவடித் தாமரைகளைத் தங்கள் உள்ளத்தில் கலந்து நின்றவர்கள் ஸ்வாமி கூரத்தாழ்வான் போந்றவர்கள் ஆவர். இப்படிப்பட்ட கூரத்தாழ்வான் போன்றோர் என்னைக் கண்டு, “இவனிடம் சிறிது நன்மை உள்ளது”, என்று உணர்ந்தனர். அவர்கள் தங்களைப் போன்றே என்னையும் “எம்பெருமானாருக்கு உரியவன்” என்று ஆக்கினர்.

English Translation

Ramanuja enshrined the world-famous Bhakti-surging Ramayana in his heart, His praise worthy devotee kurattalvan and feet-worshipping heart-melting good sage Parasara Bhattar saw some sing of hope in my lowly self and took me into their service.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்