விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நயவேன் ஒருதெய்வம் நானிலத்தே*  சில மானிடத்தைப்- 
  புயலே என*  கவி போற்றி செய்யேன்*  பொன் அரங்கமென்னில்-
  மயலே பெருகும் இராமானுசன்*  மன்னு மாமலர்த்தாள்- 
  அயரேன்*  அருவினை என்னை எவ்வாறு  இன்று அடர்ப்பதுவே?    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு தெய்வம் - வேறொரு தெய்வத்தை;
நயவேன் - விரும்பமாட்டேன்;
நால்நிலத்தே - இவ்வுலகில்;
சில மானிடத்தை - சில நீகமனிதர்களைக் குறித்து;
புயலே என - ‘மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி;

விளக்க உரை

எம்பெருமானாரைத் தவிர்த்து மற்றோருவரை நான் பரதேவதையை என்று கூறமாட்டேன், அதனை விரும்பவும் மாட்டேன். மதுரகவியாழ்வார் -தேவு மற்றறியேன் – என்று நம்மாழ்வார் குறித்து இருந்தது போன்றும்; ஸ்வாமி மணவாளமுனிகள் – உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா மன்னுபுகழ்சேர் வடுகநம்பி – என்று புகழ்ந்த ஸ்வாமி வடுகநம்பி போன்றும் – நான் இருப்பேன். அனைத்து திசைகளிலும் கடலால் சூழப்பட்ட உலகில் உள்ள க்ஷுத்ரன் ஒருவனைக் குறித்து, “நீர் நிலம் என்று வேறுபாடு காணாமல், எங்கும் ஒரே தன்மையுடன் பெய்யும் மழை போன்று குணம் உள்ளவன்”, என்று மற்றவர்களைத் துதிக்கமாட்டேன். “திருவரங்கம்” என்று கூறினாலே போதும் – அந்தச் சொல்லைக் கேட்டு, காதல் வயப்பட்டு நிற்கும் எம்பெருமானாரின் தாமரை போன்ற திருவடிகளை நான் மறக்க மாட்டேன். இவ்விதம் நான் உள்ளபோது, எம்பெருமானாரின் தொடர்பு உள்ள என்னைக் கர்மங்கள் மற்றும் கர்மவினைகள் எவ்விதம் பாதிக்கும்?

English Translation

I shall not offer worship to any god on Earth, I shall not praise some mortal with words like, "O Cloud!" But I shall never forget the lotus feet of Ramanuja, whose love flows like a flood on the mere mention of Tiru-Arangam. How can karma ever approach me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்