விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச* 
  மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*
  நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்* 
  கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஜடையன் - நுடையையுடையவனான சிவபெருமானுடைய
முடி - தலையில் (அணியப்பெற்றுள்ள)
கொன்றை மலரும் - (செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன் - (அச்சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் அழாயும் - திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்

விளக்க உரை

எம்பெருமான் மாவலி கையில நீரேற்றுப் பெற்று உலகளக்கத் தொடங்கி ஓங்கியுயர்ந்தபோது சந்த்ரஸூர்யர்கள் இதுவென் புகுந்த்திங்கந்தோ என்றாற்போல அஞ்சினராம்; அப்படி அவர்கள் அஞ்சும்படி விம்மி வளர்ந்த எம்பெருமான் பொருந்தி யெழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னும் கடிநகரென்க. சந்திரன் அம்ருதமயமான கிரணங்களையுடையவனாதலால், சலம்பொதியுடம்பின்னாக்க் கூறப்படுதல். பேழ்-பெருமை. “சலம்பொதியுடம்பிற் சந்திரன், தழலுமிழ்பேழ்வாய் வெங்கதிர்” என இயைந்துரைக்கப்பட்டது. பின் ஒன்றவாயடிகளால், கங்கையை வருணிக்கின்றார். இக்கங்கை முதலில் எம்பெருமானது திருவடியினின்றும் பெருகிப்பின்பு சங்கரன் சடையினில் தங்கி, ஆகாசத்தில் நின்றும் நிலவுலகத்தில் பிரவஹித்தமையால், எம்பெருமானுடைய பாத்த்துழாய்மலரோடும் சிவபிரானுடைய முடிக் கொன்றைமலரோடுங்கலந்து பசுமைநிறமும் செந்நிறமுமாகத் தோற்றுகின்ற நீர்ப்பெருக்கினால் விலுக்ஷணமானதொரு புகரைப்பெறுமென்க. “கலந்திடும்” என்பதைச் சடையோடும் இயைக்கலாம், சடையனோடும் இயக்கலாம். எம்பெருமானுடைய ஸ்ரீபாத்தீர்த்த்த்தைத் தனக்குத் தூய்மை விளைக்குமதாக ப்ரதிபத்திபண்ணித் தலையால் தரிக்கைக்கு மேற்பட்ட நன்மையில்லையிறே சடையானுக்கு.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga whose surging water sparkles with Konrai flowers of the mat-haired-Siva and the Tulasi from the feet of Narayana. It is an abode of the gem-hued Lord Purushottama who grew and touched the sky, when the snow-filled Moon and the hot-rayed Sun stood in awe.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்