விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,*  என் செய்வினையாம்- 
  மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை*  மேவும்நல்லோர்- 
  எக்குற்ற  வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்* 
  அக்குற்றம் அப்பிறப்பு*  அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் செய்வினை ஆம் - என்னாலே செய்யப்பட்ட  வினையாகிற;
மெய் குற்றம் நீக்கி - நிலைநின்ற தோஷங்களைப் போக்கி;
விளங்கிய - (இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோ மென்னாம் மகிழ்ச்சியாலே உஜ்வலரான;
மேகத்தை - பரம உதாரராய்;
திக்கு உற்ற கீர்த்தி - திசைகள் தோறும் விரிந்த புகழையுடையரான;

விளக்க உரை

மற்றவர்கள் மூலம் அல்லாமல் என்னாலேயே செய்யப்பட்ட தீய வினைகள் என்னும் நிலை பெற்ற தோஷங்கள் அனைத்தையும், அவை போன இடம் தெரியாமல், எம்பெருமானார் நீக்கினார். “இவனது விரோதிகளாக உள்ள அனைத்தையும் நீக்கி விட்டோம்”, என்று மகிழ்ந்தபடி உள்ளார் (எம்பெருமானார்). எட்டுத்திசைகளிலும் பரவியுள்ள குணப் பெருமைகள் கொண்ட எம்பெருமானாரை – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே – என்னும்படியும்; ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் – என்னும்படியும், அவரது திருவடிகளைத் தங்கள் நன்மையாகவும் இலக்காகவும் பற்றியபடி பலர் உள்ளனர். இவர்கள் வேறு எந்தப் பயனையும் யதிராஜரிடம் எதிர்பாராமல் உள்ள மஹாத்மாக்கள் ஆவர். இப்படிப்பட்ட மஹாத்மாக்கள் குற்றம் செய்யும் இழிவான பிறப்பை அடைந்த போதிலும், குற்றம் செய்யும் இழிவான தொழிலை மேற்கொண்டபோதிலும் அவர்களுக்கு இழிவு ஏற்படாது. மேலும் இது போன்ற பிறப்பு, தொழில் ஆகியவை நம்மிடம் இல்லை என்றாலும், அந்த மஹாத்மாக்களின் “யதிராஜ பக்தி” என்பது நம்மை அவர்களிடம் அடிமைப்படுத்திவிடும்.

English Translation

The world renowned Ramanuja, benevolent as the rain cloud, purged me of the terrible misdeeds of my past, The godly ones who take refuge in him, -whatever be their birth or ancestry, whatever be their misdeeds, -will be our virtuous masters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்