விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்* 
    எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*
    கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்* 
    கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடுவினை - கடுமையான பாவங்களை
களைந்திட நிற்கும் - ஒழிக்கவல்ல
கரைமேல் - கரையிலே
கை தொழ நின்ற - (பக்தர்கள்) கைகூப்பித் தொழும்படியாக நின்ற
கண்டம் என்றும் - ‘கண்டம்’ என்னும் பெயரையுடைய

விளக்க உரை

தங்கை மூக்கைத் தடிந்த விவரணமும், அதன்மேல் தோன்றும் ஆக்ஷேபத்திற்குப் பரிகாரமும், கீழ்- என்னாதன் தேவியில் எட்டாம்பாட்டினுரையில் கூறப்பட்டது. தாசரதி- வடமொழித் தத்திதாந்தநாம்.(எங்குத் தன் புகழா இத்யாதி.) ***-***-***- என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கது. புருடோத்தமன்- திருக்கண்டங்கடிகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம். இருக்கை- தொழிலாகுபெயர். பின்னடிகளின் கருத்து;- ஏதேனுமொரு குளத்தில் நீராடுமவர்கள் அந்த நீரைக் கங்கையாக நினைத்து, ‘கஙகை, கங்கை’ என்று உச்சரித்தால் உடனே அவர்களுடைய பெருப்பெருத்த பாபங்களையெல்லா மொழிக்கும்படியான பெருமை பொருந்திய கங்கையின் கரையிலுள்ள கண்டமென்கிற நகரவிசேஷமென்பதாம். திருகண்டங்கடிநகர்- வடநாட்டுத் திருப்பதிகள் பரிரண்டினுள் ஒன்று; கண்டம் என்னுமிவ்வளவே இத்திருப்பதியின் பெயர்; கடி. என்னுஞ்சொல் இங்குச் சிறப்புப் பொருளது. “மத்தாற் கடல் கடைந்து வானோர்க்கமுதளித்த அத்தா வெனகுன்னடிப்போதில்- புத்தமுதைக், கங்கைக் கரைசேருங் கண்டத்தாய் புண்டரிக, மங்கைக்கரசே வழங்கு” என்ற ஐயங்கார் பாடலில் “கண்டத்தாய்” என்ற விளி நோக்கத்தக்கது.

English Translation

The good city of Khandam worthy of worship stands on the banks of the Ganga, whose very name repeated destroys all Karma. It is the abode my perfect Lord Purushottama, son of Dasaratha, who cut asunder the sister’s nose and the brother’s heads. His reign is long and famed everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்