விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னிய பேரிருள் மாண்டபின்*  கோவலுள் மாமலராள்- 
  தன்னொடு மானை*  கண்டமை காட்டும்*  தமிழ்த்தலைவன்- 
  பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்* 
  சென்னியிற் ​சூடும்*  திருவுடையார் என்றும் சீரியரே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னிய - ஒருவாரலும் பேர்க்கமுடியாதபடியாதபடி நிலைத்துநின்ற;
பேர்இருள் - (அஜ்ஞாநமாகிறபெருத்த இருளானது;
மாண்ட பின் - முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திருவிளக்காலே) நனறாக நீங்கின பின்பு;
கோவலுள் ஆயனை - திருக்கோவலூரில் ஆயனாரை;
மாமலராள் தன்னொடும் - பிராட்டியோடு கூட;

விளக்க உரை

உரை:1

பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றின இரண்டு திருவிளக்குகளாலும் இருள் நீங்கவே, “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று திருக்கோவலூராயனாரைப் பிராட்டியோடு கூட ஸேவிக்கப்பெற்றார் பேயாழ்வார். தாம் அப்படி ஸேவித்ததாக மூன்றாந்திருவந்தாதி முகத்தால் வெளியிட்டருளின அவ்வாழ்வாருடைய திருவடிகளைக் துதிக்குமவரான எம்பெருமானார் திறத்தில் பக்தியை யுடையவர்கள் யாரோ, அவர்களுடைய திருவடிகளைச் சிரோபூஷணமாகக் கொள்வதையே அழியாச்செல்வமாக நினைத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களுடைய திருவடியைச் சிரமேற்கொள்ளுமவர்கள் தாம் நித்திய ஸ்ரீமான்கள் என்றாராயிற்று. இப்பாட்டில் பேயாழ்வார் “தமிழ்த்தலைவன்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டார்.

உரை:2

ஆத்மாவை அஹங்காரம், அஜ்ஞானம் போன்ற இருள் பற்றியபடி உள்ளது. இத்தகைய நீண்ட இருளானது பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய இருவர் ஏற்றிய ஞானதீபங்களால் நீக்கப்பட்டது. இவர்களுக்குப் பின் வந்தவர் பேயாழ்வார் ஆவார். இவர் தனது “ நீயும் திருமகளும்” என்னும் பாசுரம் மூலம் திருக்கோவலூரில் மஹாலக்ஷ்மியுடன் உள்ள க்ருஷ்ணனாகிய ஸர்வேச்வரனைக் கண்டதைக் காட்டினார் (இங்கு உள்ள தன்னொடுமாயனை என்பதை தன்னோடு +ஆயன் அல்லது தன்னோடு + மாயன் என்று பிரிக்கலாம்). ஆயன் என்பது திருக்கோவிலூரில் உள்ள ஆயனார் என்ற பெருமாளைக் குறிக்கும். மாயன் என்பது பாண்டவர்களுக்குத் தூது சென்று, அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டி, ஆயுதம் தொடமாட்டேன் என்ற சபதத்தை பாண்டவர்களுக்காக மீறி, அர்ஜுனனுக்காகச் சூரியனைத் தனது சக்கரத்தால் மறைத்து, கோவர்த்தனம் எடுத்து, அந்தணர் ஒருவரின் குழந்தை விஷயத்தில் அர்ஜுனன் செய்த சபதத்தை எண்ணி அவனைப் பல உலகங்கள் அழைத்துச் சென்று, சரமச்லோகம் உபதேசித்து – இப்படியாகப் பல வியப்பான செயல்கள் செய்த கண்ணனைக் குறிக்கும். இவ்விதம் தான் கண்டவனைப் பற்றி இனிய தமிழில் – திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கண்ணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கைக் கண்டேன் – என்று பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியை அருளிச் செய்தார். இவருடைய திருவடிகளை என்றும் போற்றும் ஸ்வபாவம் உடையவர் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உடையவரின் மீது மாறாத அன்பும் பக்தியும் உடையவர்கள், அந்த பக்தியையே தங்கள் ஆபரணங்கள் என்று கருதி அலங்கரித்துக் கொள்ளும் உயர்ந்தவர்கள் உண்டு. இவர்களது திருவடிகளைத் தங்கள் தலையில் வைக்கப்படும் அழகான மலர்கள் போன்று ஏற்றுக் கொள்வாரும் உண்டு. இவர்கள் எந்தக் காலத்திலும் உயர்ந்து நிற்பவர்கள் ஆவர்.

English Translation

After the pail of darkness was dispelled that night in Tirukkovalur, Peyalvar saw the cowherd lord, the wonder lord with the lotus-dame Lakshmi, Ramanuja worshipped the Alvar's golden feet. Those who pour their lover over Ramanuja are fortune-favoured devotees of excellent merit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்