விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட*  ஞானமென்னும்- 
  நிறைவிளக்கு ஏற்றிய*  பூதத் திருவடி தாள்கள்,*  நெஞ்சத்து- 
  உறையவைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும்நல்லோர்* 
  மறையினைக் காத்து*  இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பூதத் திருவடி - பூதத்தாழ்வாருடைய;
தாள்கள் - திருவடிகளை;
நெஞ்சத்து - தமது திருவுள்ளத்திலே;
உறைய வைத்து - சாச்வதமாக ஸ்தாபித்து;
ஆளும் - (அவற்றையே) அநுபவிக்கின்ற;

விளக்க உரை

உரை:1

‘ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்’ என்னும் விருது இராமாநுசனுடையார்க்கே ஏற்குமென்கிறார். ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பதற்கு எல்லார்க்கும் உபகரணமாகயிராநின்ற ஹருதயமானது அஜ்ஞாநாந்தகாரத்தாலே இருண்டு கெட்டுப்போகாதபடி பரஜ்ஞாநமாகிற பூர்ண தீபத்தை எற்றினவரான பூதத்தாழ்வாருடைய திருவடிகளைத் தமது திருவுள்ளத்திலே இடைவிடாது வைத்துக்கொண்டு அவற்றையே அனுபவிக்கும் எம்பெருமானாருடைய குணகீர்த்தநமே போது போக்காக இருக்கும் விலக்ஷணர் யாரோ அவர்கள் தாம் வேதத்தை நன்றாக ரக்ஷித்து இந்நிலவுலகத்தில் நிலைநிறுத்தவல்ல மஹான்கள் என்றாராயிற்று பூதத்தாழ்வார் ஏற்றிய ஞானமென்னாம் நிறைவிளக்காவது - இரண்டாந் திருவந்தாதியாகிற அவருடைய அருளிச்செயல் பூதத்திருவடி = திருவடியென்று இங்கே ஸ்வாமிக்கு வாசகம்; பூதத்தாரென்னாம் ஸ்வாமி என்றபடி. (மறையினைக்காத்து மன்னவைப்பவர்) எம்பெருமானார் ஸம்பந்தம் பெறாத மற்றையோர்கள் “வேதம் ப்ரமாணமேயல்ல” என்று சொல்லுவாரும், அதனைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டும் அபார்த்தங்கள் பண்ணுவாருமாய் இருப்பதால் அவர்கள் யாவரும் வேதமார்க்க வித்வம்ஸிகள்; இராமாநுசனாடையார் தாம் ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டா பநாசார்யர்கள் என்றபடி.

உரை:2

அனைத்திற்கும் எஜமானனாக உள்ளவனை நாம் அறிந்து, உணர்ந்து கொள்வதற்கு ஏதுவான கருவி நமது இதயமே ஆகும். இத்தகைய இதயத்தில் பூர்வகர்ம பலன்கள் காரணமாக, அஜ்ஞானம் என்ற இருள் சூழ்ந்து கிடக்கிறது. அத்தகைய இருள் நீங்கும் விதமாக, பரம்பொருள் பற்றிய ஞானம் என்ற பரிபூர்ணமான விளக்கை ஏற்றியவர் பூதத்தாழ்வார் ஆவார். இந்த விளக்கு எப்படி உள்ளது என்றால் – அன்பே தகளி, ஆர்வமே நெய், சிந்தனையே திரி என்று கொண்டு ஞானமயமாக உள்ளது. அதாவது – ஆழ்வாரின் பக்தி என்பதே விளக்கானது; ஆழ்வாரின் ஆர்வமே நெய்யானது; பகவத் அனுபவத்தில் எப்போதும் ஊறிக் கிடக்கும் ஆழ்வாரின் மனமே திரியானது; பரிபூர்ணமான ஞானம் என்பதே தீபமானது; இப்படியான ஒரு விளக்கை நாராயணனுக்கு ஏற்றினார். இத்தகைய பூதத்தாழ்வாரின் உயர்ந்த திருவடிகளைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் வாசம் செய்யும்படியாக வைத்து அனுபவிப்பவர் உடையவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானாரின் உயர்ந்த கல்யாணகுணங்கள் குறித்து முன்பே பல பெரியோர்கள் உரைத்தனர் – கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று இவரது பிறப்பை முன்பே உணர்த்தினார் நம்மாழ்வார்; இத்தகைய இவரது விக்ரஹம் இவ்விதம் இருக்கும் என்று காலம் முழுவதும் சிந்தித்தவர் நாதமுனிகள்; “ஆ முதல்வன்” என்று வியப்புற்றவர் ஆளவந்தார். மற்ற மதத்தினர் மூலம் வேதங்கள் அழியாமல் காத்து நிற்பவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே ஆவார்கள்.

English Translation

Butattalvar lit a lamp of knowledge to dispel the darkness of seeker's hearts. Ramanuja placed the Alvar's feet in his heart and rejoiced. The good ones who preserve the Vedas will always sing his praise.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்