விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சீர்அணி மால்*  திருநாமமே இடத்தேற்றிய* 
  வீர்அணி தொல்புகழ்*  விட்டுசித்தன் விரித்த*
  ஓரணியொண்தமிழ்*  ஒன்பதோடுஒன்றும் வல்லவர்* 
  பேர்அணி வைகுந்தத்து*  என்றும் பேணியிருப்பரே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சீர் - கல்யாணகுணங்களை
அவரி - ஆபரணமாகவுடையவனும்
மாலி - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய
திரு நாமமே - திருநாம்தையே
இட - (தம் பிள்ளைகளுக்கு இடும்படி)

விளக்க உரை

எம்பெருமானுடைய திருநாமங்களையே தந்தம் பிள்ளைகளுக்கு நாமகாணம் பண்ணும்படி நாட்டாரைநோக்கி உபதேசித்துப் பெரியாழ்வாரருளிச் செய்த இப்பத்துப்பாட்டையும் ஓதவல்லவர்கள் பரமபதத்தில் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடப்பெறும் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகின்றார். மால் - பெரியோணுமாம். தேற்றுதல்- அறிவித்தல்,தெரிவித்தல். வீரம்+ அணி- வீரணி; தொகுத்தல் விகாரம் அடிவரவு:- காசும் அங்கொரு உச்சி மானிட மல நாடு மண் நம்பி ஊத்தை சீரணி தங்கை.

English Translation

This decad of sweet songs by bold and famous Vishnuchitta recommends giving the names of Tirumal to children. Those who master it will eternally enjoy high Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்