விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ளார்  பொழில்  தென்ன‌ரங்கன்*  கமலப் பதங்கள் நெஞ்சில்- 
    கொள்ளா*  மனிசரை நீங்கி*   குறையல் பிரான‌டிக்கீழ்- 
    விள்ளாத அன்பன் இராமானுசன்*  மிக்க சீலமல்லால்- 
    உள்ளாது என் நெஞ்சு*  ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

க​மலம் பாதங்கள் - தாமரை போன்ற திருவடிகளை;
நெஞ்சில் கொள்ளா - தமதுநெஞ்சிலே வையாத;
மனிசரை நீங்கி - மனிதர்களை விட்டொழித்து;
இராமாநுசன் - எம்பெருமானாருடைய;
மிக்க சீலம் அல்லால் - சிறந்த சீலகுணத்தைத் தவிர;
இராமாநுசன் - எம்பெருமானாருடைய;

விளக்க உரை

உரை:1

ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளொடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளோடு உறவை ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுணமொன்றையே சிந்தியாநின்றது; இப்படிப்பட்டதொரு பெருந்தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபாகடாக்ஷமே யொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.

உரை:2

தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன் சயனித்துள்ளான். தாமரைமலர் போன்ற அழகும் செம்மையும் கொண்ட அவனது திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல் உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு. கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும், அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை (பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள் நெஞ்சத்தில் எண்ணாதவர்களை), நான் விலக்க வேண்டும். திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின் கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர் எம்பெருமானார் ஆவார். அவருடைய மிகவும் உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும் என் மனம் சிந்திப்பதில்லை. மிகவும் தாழ்ந்தவனாகிய என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை

English Translation

I cannot understand this good fortune. My heart does not think of anything other than the extreme benevolence of Ramanuja. He gave up the company of men who do not contemplate the lotus feet of the nectar-groves-surrounded-Arangam lord, and only sought the feet of the kuraiyalur king. Tirumangai Alvar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்