விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 
    பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 
    தாம்மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 
    நாம்மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே!  -  ஓ மனமே;
பூ மன்னா மாது - தாமரைப்பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி;
அடி - திருவடிகளை;
பணிந்து - ஆச்ரயித்து;
புகழ் மலிந்த பா - திருக்கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப்பாசுரங்களிலே;
மன்னா மாறன் - ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய;

விளக்க உரை

உரை:1

தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப்பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைதொழுது ஸத்தை பெற்றவாயும், பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யயங்கள்கொண்டு தடுமாறு கின்றவர்களை ஒரு நிச்சயஜ்ஞானத்திலே நிலைநிறுத்தி வாழ்விக்கவந் ரதவதரித்தவராயுமிருக்கிற எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று. பல்கலையோர் தாம்மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக் கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம்.

உரை:2

மலர்மேல் மங்கை என்றும், பத்மே ஸ்திதாம் என்றும் கூறுவதற்கு ஏற்றபடி தாமரைமலரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவள் பெரியபிராட்டி ஆவாள். அப்படிப்பட்ட அவள் – அகலகில்லேன் இறையும் – என்று நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவன் பெரியபெருமாள் ஆவான். இந்தப் பெரியபெருமாளின் திருக்கல்யாண குணங்களின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் திருவாய்மொழியை அருளிச்செய்வதில் மட்டுமே நிலைநின்றவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளை அண்டி நின்று, அவற்றின் மூலம் மட்டுமே வாழ்ந்து வருபவர்; பலவகையான சாஸ்த்ரங்கள் கற்றுச் சிறந்து விளங்கும் கூரத்தாழ்வான், கோவிந்தர், தாசரதி போன்றோரும் சாஸ்த்ரங்களை நன்றாகப் பயின்றும் அவற்றை விரோதித்து நின்ற யாதவப்ரகாசர், யஜ்ஞமூர்த்தி போன்றோரும் தன்னிடம் வந்து நிலையாக இருக்கும்படி உள்ளவர் – இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளை, அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் – எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்

English Translation

O Hean! Come let us recite Ramanuja's name. He set men of learning on the proper track. He worshipped the feet of the prolific poet Maran who rendered mouthfuls of praise for the lord who bears the lotus dame Lakshmi on his chest, May we always live close to his lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்