விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 
    அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*
    அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 
    அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவாவில் - பக்தியினா லுண்டானதான
அந்தா திகளால் - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த
இவை ஆயிரமும் - இவ்வாயிரத்தினுள்ளே
முடிந்த அவாவில் - பரம பக்தியாலே பிறந்ததான
அந்தாதி - அந்தாதியான

விளக்க உரை

உரை:1

பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். கீழ் முதற்பத்திலே அஞ்சிறையமட நாரையில் எம்பெருமாளுக்கு ‘அருளாத நீர் என்று திருநாமஞ் சாத்தின ஆழ்வார்தாமே இப்போது “அவாவறச் சூழாரி” அலற்றி அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன – கூப்பிட்டு அவனைப் பெற்று ஸமஸ்தப்ரதிபந்தகங்களும் தொலைந்து அந்தமில்பேரின்ப மெய்தின ஆழ்வாரருளிச் செய்த. (அவாவிலந்தாதி) இத்திவ்வியப் பிரபந்தத்திற்குத் திருவாய்மொழியென்று திருநாமம் ப்ரஸித்தமாயிருந்தாலும் ஆழ்வாருக்கு திருநாமம் அவாவிலந்தாதி யென்பதே. அவாவினால் அவதரித்த அந்தாதித் டிதாடையான திவ்யப்ரபந்தமென்றபடி. தங்களுடைய கவித்வத்தைக் காட்டுதற்கென்று க்யாதிலாப பூஜா பேக்ஷையாலே பிரபந்தங்கள் இயற்றுவார் பலருண்டு. அப்படியல்லாமல் பக்தி பலாத்காரத்தாலே பிறந்ததாயிற்று இவ்வாயிரம். ஆசார்ய ஹ்ருதயத்தில் (188) “நீர்பால் நெய்யமுதாய் நிரம்பினவேரி நெளிக்குமாபோலே.. அவாவிலந்தாதியென்று பேர் பெற்றது“ என்ற சூர்ணையின் மணவாளமாமுனிகள் வியாக் நியானம் இங்கு ஸேவிக்கத்தக்கது. “அவர் உபாத்தியாராக நடத்த நடந்த ஆயிரம்“ என்றும், “ஆழ்வார்க்குப் பின்பு நூறாயிரங் கவிகள் போருமுண்டாயிற்று, அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற்று அவற்றை விட்டு இவற்றைப் பற்றித் துவளுகைக்கடி இவருடைய பக்தியபிநிவேசம் வழிந்து புறப்பட்ட சொல்லாகையிறே“ என்றுமுள்ள ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க. முடிந்த அவாவிலந்தாதியிப்பது – இதற்குமேல் அவா இல்லையென்னும்படியானது பரமபக்தியாகையாலே அதனை முடிந்தவவா வென்னுஞ் சொல்லாலே அருளிச் செய்தபடி. பக்தியினுடைய சரமாவதியான பரமபக்தி யென்கை. ஆக இப்படிப்பட்ட பரமபக்தியின் பரீவாஹரூபமாகத் தோன்றின இப்பதிகத்தை யறிந்தவர்கள், பிறந்தாருயர்ந்தே – பிறந்தே உயர்ந்தாரென்று விகுதி பித்துக் கூட்டிப் பொருள் கொள்ளவேணுமென்பது ஆசாரியர்களின் திருவுள்ளம். ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே நித்யஸூரிகளோ டொப்பர் என்றபடி. எம்பெருமான் இந்நிலத்தில் பிறந்திருக்கச்செய்தேயும் உயர்த்தியில் குறையற்றியிருப்பது போலவே திருவாய்மொழி வல்லார்களும் ப்ராக்ருதர்களின் கருத்தாலே ஸம்ஸாரிகளாய், தத்வஞானிகளின் திருவுள்ளத்தாலே நித்யமுக்தர்களாய் விளங்குவர்களென்றதாயிற்று.

உரை:2

அவா நீங்கும் படி சூந்து வரும் திருமாலை, நான்முகனை, சிவபெருமானைப் போற்றிப் பாடி, அவா நீங்கி வீடு பெற்ற குருகூரின் சடகோபனாகிய நான் சொன்ன அவா நீக்கும் அந்தாதித் தொடையால் அமைந்த இந்த ஆயிரம் பாடல்களை நிறைவு செய்த அவா நீக்கும் அந்தாதியான இந்தப் பத்துப் பாடல்களையும் பாடியவர்கள் வீடு பேறு பெற்று உயர்ந்தார்கள் என்றே கொள்ளலாம்.

English Translation

This consummate decad of the adorable thousand songs, on the Lord who appears as Hari, Brhma and Siva, is by kurugur Satakopan who found his liberation. Those who master it will be born in high

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்