விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவில் பெரும் பாழேயோ* 
    சூழ்ந்ததனில் பெரிய*  பரநல் மலர்ச்சோதீயோ*
    சூழ்ந்ததனில் பெரிய*  சுடர்ஞான இன்பமேயோ!*
    சூழ்ந்ததனில் பெரிய*  என் அவாஅறச் சூழ்ந்தாயே!   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த - பத்து திக்கிலும் வ்யாப்தமாய்
முடிவு இல் - நித்யமாயிருக்கிற
பெரு பாழே ஓ - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே!
சூழ்ந்து - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து
அதனில் பெரிய - அதற்காட்டிலும் பெரியதாய்

விளக்க உரை

பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார். ஆழ்வார் தம்முடைய அபிநிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக மூன்றடிகளில் தத்த்ரயத்தினுடைய பெருமையை அருளிச்செய்கிறார். அசித்தத்வத்தினயை பெருமையைச் சொல்லுகிறது முதலடி; சித் தத்வத்தினுடைய பெருமையைச் சொல்லுகிறது. இரண்டாமடி; ஈச்வர ததத்தினுடைய பெருமையைச் சொல்லுகிறது மூன்றாமடி. இப்படி தத்வத்ரயத்தை ஒன்றுக்கொன்று பெரிதாகச் சொல்லிக்கொண்டு போந்து இவற்றிற்காட்டிலும் பெரிது தம்முடைய அவர் என்று ஈற்றடியிலேயருளிச் செய்து, அது அறச் சூழ்ந்தாயேயென்று தலைக்கட்டுகிறார். என்னவாவற என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள் திருவுள்ளம்பற்றுவர் ஆசிரியாரிகள். என்னுடைய அவர் தீரும்படியாகப் என்பது ஸாமாந்யமான பொருள். நையாயிகர்கள் “இச்சாயா விஷ்ய ஸிதத்யா ற்நச:’ எனபர்கள். ஒரு விஷயததிலுண்டான இச்சையானது அந்த விஷயம ஸித்தித்வாறே நசிக்குமென்பது இதன் பொருள். தீர்த்தம் பருகினவாறே பிபாஸை சமிக்கிறது; சோறுண்டாவாறே நசிக்கும்மென்பது இதன் பொருள். தீர்த்தம் பருகினவாறே பிபாஸை சமிக்கிறது; சோறுணடவாறே புபுiகூஷசமிக்கிறது. ஆகவே இச்சா விஷய ஸித்தியாலே இச்சைக்ஃக நாசமென்று தேறுகையாலே ஆழ்வார் தம்முடைய அவாவுக்கு விஷயமான பகவதநுபவம் இப்போது ஸித்தித்துவிடுகையாலே அவா அற்றதென்று கொள்வது. இங்ஙனே கொள்ளும் பொருளிற்காட்டிலும் மிகச சீரிய பொருள் மற்றொன்று கேளீர். அற என்பது வடமொழியில் நஞ்ஞின ஸ்தானத்திலே வந்துள்ளது. அந்த நஞ்ஞக்கு ஆறு பொருள்கள் சாஸ்த்ரஜ்ஞா;களால் சொல்லப்பட்டுள்ளன; அவற்றுள் அல்பத்வம் என்பதும் பொருள் தோன்றும், ஆனால் அதுவன்று பொருள்; (அல்போதரா கந்யா) மிகச்சிறிய வயிற்றையுடையவள் இப்பெண் என்பதே பொருள். அதுபோலவே இங்கு ‘என் அவா அற’ என்பதற்கு என்னுடைய அவா சிறிதென்னும்படி என்று பொருள்கொள்வது சிறக்கும். இதுவரையில் ஆழ்வார் தம்முடைய அவாவே பெரிதென்றிருந்தார்; இ;ப்போது தம்மையநுபவிக்கப் பதறிவந்த எம்பெருமானுடைய அமாவின் மிகுதியைப் பார்த்தவாறே அது கடலாயும். தம் அவா குளப்படியாயும் தோன்றிஇங்ஙனேயருளிச் செயகிறாரென்க. இங்கே ஈடு காண்க;- “தத்வத்ரயத்தையும விளாக்குலைகொண்டு அவை குளப்படியாம்படி பெரிதான என்னுடைய அபிநி

English Translation

O Great expanse, wide, deep, tall, and endless! Expanding bigger than that, O Radiant flower! Expanding bigger than that, O Radiant knowledge-bliss! Expanding bigger than that, you have mingled into me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்