விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முதல்தனி வித்தேயோ!*  முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்* 
    முதல்தனி உன்னைஉன்னை*  எனைநாள் வந்து கூடுவன்நான்?*
    முதல்தனி அங்கும்இங்கும்*  முழுமுற்றுறுவாழ் பாழாய்* 
    முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவிலீஓ!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம - மூவுலகு தொடக்கமான எல்லாவற்றுக்கும்
முதல் தனி வித்தே ஓ - முவகைக் காரணமுமானவனே!
அங்கும் இங்கும் முழு முற்று உறு - எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய்
முதல் தனி - அத்விதீய காரணமாய்
வாழ் - போதமோகூஷங்களாகிற வாழ்ச்சிக்கு

விளக்க உரை

எம்பெருமான் உலகங்களையெல்லாம் தனக்கு சாரிரமாகக் கொண்டு எங்கும் பரந்தவனாயிருப்பது ஸாதாரணாகாரு மெனப்படும்; திருநாட்டிலே திவ்யமங்கள விக்ரஹத்தோடே எழுந்தருளியிருப்பது அஸாதரணாகார மெனப்படும். தீயெம்பெருமான் நீரெம்பெருமான் திசையு மிரு நிலனாமாய்எம்பெருமானாகிநின்றால் அடியோங் காணோமால் (பெரிய திருமொழி 4-9-5) என்று திருமங்கை யாழ்வாரருளிச் செய்தபடியே ஆழ்வார்கள் ஸர்வஸாதாரணாகாரங் கொண்டு த்ருப்தி யகைரிறவர்களெல்லர். ஏனென்னில்; ஜகதாகாரனாயிருக்கு மிருப்பு உகந்தார்கு;கும் உகவாதார்க்கும் பொதுவாயிருந்தது; அஸாதாரணாகாரம் அப்படிப்பட்ட தன்று. ஆகவே அதனைக் கண்டே திருப்திபெறவேண்டி யிருப்பர்கள். அப்படிப்பட்ட தன்று. ஆகவே அதனைக் கண்டே த்ருப்திபெறவேண்டி யிருப்பர்கள். அப்படிப்பட்ட த்ருப்தியைத் தந்தருள வேணுமென்கிறாரிப்பாட்டில். முழு மூவுலகாதிக்கெல்லாம் முதல் தனிவ்த்தேயோ-மூவுலகு தொடக்கமாக ஒன்றொழியாமல் எல்லா வற்றுக்கும் மூவகைக் காரணமுமானவனே! என்றபடி. நீ ரகூஷக்க வென்று புக்கால் ரகூஷ்யவர்க்கம் ஸஹகாரிக்க வேண்டாதபடி அஸஹாயனாய் நின்று ரகூஷிக்க வென்று புக்கால் ரகூஷ்யவர்க்கம் ஸஹகாக்க வேண்டாதபடி அஸஹாயனாய் நின்று ரகூஷிப்பவன்ன்றோ என்பத பரமதாள்பாரியம். முதல் தனியுன்னை உன்னை -முதல்வானாய் ஒப்பில்லாதவனாயிருக்கிற வுன்னை. ‘உன்னை உன்னைக் என்று இரட்டித் திருப்பதன் கருதத்தை நம்பிள்ளை காட்டுகிறார் ‘நீயான வுன்னைக் என்று; நீயான வுன்னை யென்றால் ‘இது அந்வயிக்கவில்லையே’ யென்று தடுமாறுவர் சிலர், அஸாதாரணாகாரத்ததோடு கூடிய வுன்னை என்பத தாற்பாரியம். நான் எனைநாள் ந்து கூடுவன்-திருநாட்டில் சுவடறிந்தவனும் அஸாதாரண் விக்ரஹ ஸேவையை யாசைப்பட்டபவனுமான நான் என்று வந்து கூடுவன்? மூன்றாமடியினால் அசேநதத்வத்திற்கு நிர்வாஹகனாயிருக்கிறபடியும். நான் காமடியினால் சேதநத்தவத்;திற்கு நிர்வாஹகனாயிருக்கிறபடியும் சொல்லப்பட்ன். பாழ் என்று ப்ரக்ருதிதத்வத்திற்குப் பெயர்; இஷ்டமானபடி போகங்களையும் மோகூஷத்தையும விளைத்துக் கொள்ளலாம் நிலமாகையாலே. எம்பெருமாளையே நோக்கிப் பாழே’ என்கிறது நிர்வாஹ்ய நிர்வாஹகபாவஸமபந்த நிபந்தநமான அபேதோபசாரம். முடிவிலியென்று -பரக்ரதிபோலே நச்வாமன்றிககே நித்தியமான ஆத்மதத்வத்தைச் சொல்லுகிறது. இங்கும் சொல் ஆத்மதத்வத்தோடு நிற்காமல் அதற்கு நிர்வாஹகனான எம்பெருமானளவுஞ் செல்லுகிறது.

English Translation

O First-cause seed of all the worlds, the first-cause, you When will I come and join you? O First-cause continuum here, there and everwhere, -surrounding me, wide, deep, fall, and endless!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்