விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊத்தைக்குழியில்*  அமுதம் பாய்வதுபோல்*  உங்கள்- 
    மூத்திரப்பிள்ளையை*  என் முகில்வண்ணன் பேர் இட்டு*
    கோத்துக் குழைத்துக்*  குணாலம்ஆடித் திரிமினோ* 
    நாத்தகு நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊத்தை குழியில்அமுதல் பாய்வது போல் - அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே
உங்கள் மூத்திரம் பிள்ளையை - உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு
கோத்து குழைத்து - (அவ்வெம்பெருமானோடு) கூடி கலந்து
குணாலம் ஆடி - குணாலைக் கூத்தாடிக் கொண்டு
திரிமின் - திரியுங்கள்

விளக்க உரை

பரமபாவகமாகிய எம்பெருமான் திருநாமத்தைப் பரமஹேயரான மானிடமக்களுக்கு இடுவது- அசுத்தமாகிய ஒரு எச்சிற்குழியில் அமருதத்தைப் பாய்ச்சுவதை ஒக்குமென்ன, ஊத்தைக்குழியில் அமுதம் பாய்ந்தால், அல்லமுகந்தானும் அத்தோடொக்க அசுத்தமாய் அபோக்யமாபொழியும்: எம்பெருமானுடைய திருநாமமோவென்றால் அங்ஙன்றியே தனக்கு ஒரு ஸபப்சதோஷமில்லாதபடி தான் புகுந்தவிடத்தையும் பரிசுத்தமாக்கி விவக்ஷண பரிச்சாஹ்யாம்படி பண்ணுமென்று அமுதத்திற்காட்டில் திருநாமத்திற்கு வாசி அறியத்தக்கது. இப்படி தமது பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை நாமகரணம் பண்ணும்போதே தாம் அவ்வெம்பெருமானுக்கு அந்தரங்கபூதர்களாக ஆவதனால், அவனோடு கூடிக்கலந்து களித்துத் திரியப்பெறுவர். குணாலைக் கூத்தாவது ஆகநீதத்துக்குப் போக்குவீடாகத் தலைகீழாக ஆடுவதொருகூத்து. ஆகத்தம் தலைமண்டைகொண்டால் மெய்மறந்து கூத்தாடும்படி யாகுமென்பதைத் திருவாய்மொழியில் “மொய்ம்மாம் பூம்பொழிற்பொய்கை” என்ற திருவாய்மொழியினால் அறிக. கோத்துக்குழைத்து ஒருபொருட் பன்மொழி; ‘கூடிக்கலந்து” என்பதுபோல. குழைத்து என்றெவிதுக்குழைந்து’ என்ற தன்வினைப் பொருலில்வந்த பிறவியினை. “நாத் தகும்” என்பதற்கு (பிள்ளைக்குத் திருநாமத்தை விட்டு அத்தைப்பலகாலுஞ் சொல்லுகையாகிறயிது) உங்கள் நாவுக்குச் சேரும்’ என்று முரைப்பர்.

English Translation

Like nectar associated with an unwashed mouth, give my cloud-hued Lord’s name to your piss-child, then go about singing and dancing and somersaulting , repeating his name. Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்