விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய*  என் அன்பேயோ* 
    நீலவரை இரண்டு பிறைகவ்வி*  நிமிர்ந்தது ஒப்ப*
    கோல வராகம்ஒன்றாய்*  நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்* 
    நீலக் கடல்கடைந்தாய்!*  உன்னைபெற்று இனிப் போக்குவனோ?  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோடு இடை கொண்ட - எயிற்றிலே கொண்டெடுத்த
எந்தாய் - எம்பெருமானே!ஸ
நீலம் கடல் உடைந்தாய் - உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே!
உன்னை பெற்று - உன்னைப் புகலாகப் பெற்று வைத்து
இனி போக்குவனோ - கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ!

விளக்க உரை

பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார். (கோலமலரிப் பாவைக் கன்பாக்ய என்னன்பேயோ) கீழ்ப்பாட்டின் ஈற்றடியும் இப்பாட்டின் இந்த முதலடியும் ஒன்று போலே மயங்கக்கூடியதாயிருந்தாலும் ஒன்றன்று, சிறிது வாசியுண்டு; “கோல மலரிப்பாவைக்கு அன்பா! என்னன்பேயோ” என்றுள்ளது கீழ்ப்பாட்டில்; இப்பாட்டிலோ வென்னில்; ‘கோல அன்பாகிய என்னன்பேயோ” என்றுள்ளது. பெரிய பிராட்டியார்டத்தி;ல் அன்பின் மிகுதியாலே அவ்வன்பே அடியாக அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்பு கொண்டிருப்பவனே! என்றபடி. கீழ்ப்பாட்டில் இரண்டு விளிகள்; இப்பாட்டில் ஒரே விளி என்பது முணரத்தக்கது. (நீலவரை பிரண்டு இத்யாதி.) ஆழ்வார் முதற்பிரபந்தமான திருவிருத்தத்தில் பெருங்கேழலார் தம்பெருங்கண்மலரிப்புண்டாரிகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார் என்று ஸ்ரீ வராஹப்பெருமாஉடைய கடாகூஷ விசேஷமே தமக்கு நிதியானதென்று அருளிச்செய்து, அப்பிரபந்தத்தின் முடிவிலும் ஏனத்துருவாயிடந்த ஞானப்பிரானையல்லாலில்லை நான் கண்டநல்லதுவே என்றருளிச்செய்திருக்கையாலே அவற்றுக்குச்சேர, திருவாய்மொழி தலைக்கட்டுமிப்போதும் வராஹாவதாரப்ரசம்ஸையேயாகிறது. மாறன் பணித்த தமிழ்மறைக்கு ஆறங்கங்கூற அவதாரித்த மங்கையர்கோஎம் ஸ்வப்ரபந்தத் தொடக்கத்தில் பன்றியாயன்று பாரகங்கீண்ட பாழியானாழியானருளே நன்று என்று இவற்றைப் பின்பற்றியே அருளிச்செய்தாரென்பர்ஸம்பிரதாயம் வல்ல பெரியார். இரண்டு பிறையைக் கவ்விக்கொண்டு அஞ்சனமலை நிமிர்ந்தாற்போலே கோலவராகமாகி நிலத்தை எயிற்றிடையிலே கொண்ட பெருமானே! என்கிறார். நீலமணிபர்வதத்தின் ஸ்தானத்திலே கோலவராஹமும் இரண்டு பிறைகளின் ஸ்தானத்திலே இரு கோரப்பற்களும் கொள்க. கோரப்பற்களிலே ஏந்திக்கொண்ட நிலத்திற்கு ஒருபமானம் சொல்லப்படாதது ஏனென்னில் பூமி தனிப்பட ஒரு வஸ்துவாகவே தெரியாமலிருந்தமைதான் இங்குத் தெரிவிக்கப்படுகிறது. “பிறையில் மறுவோபாதியாய்த்து திருவெயிற்றில் கிடந்த பூமி” என்ற ஈட்டு ஸ்ரீஸீக்தியின் சுவையறிக. பிரளயங்கொண்ட பூமியை அண்டபித்தியிலேபுக்கு எயிற்றிலே கொண்டெடுத்தாப்போலே ஸம்ஸாரப்ரளயங்கொண்ட என்னையெடுத்தவனே! என்பது இவ்விடத்து உள்உறை பொருள். நீலக்கடல் கடைந்தாய்-பிராட்டியைப் பெறுதற்காகக் கடைந்த கடல் பாற்டலாயிருக்க, நீலக்கடலென்றது-கடைகிற பெருமான் காளமேக நிறத்தனாகைனாலே அவனது திருமேனியின் நிழலிட்டாலே கடலும் கறுத்ததாகத் தோன்றிற்று என்று காட்டுதற்காக. கூஷீராம்போதேர் ஜடரமபிதேச தேஹபாஸாம் ப்ரரோஹை: காலோந் மீலத் குவலயதளாத்வைத மாபாதயந்தம் என்ற சம்பூராமாயணமும் காண்க. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் அபி பணிபதிபாவாத் இத்யாதியான ஸ்ரீ ரங்கவிமாந வர்ணன ச்லோகமும் இங்கே அநுஸந்திக்கத்தகும். உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ பூமிப்பிராட்டியைப் பெறுகைக்கும் பெரியபிராட்டியைப் பெறுகைக்கும் பாடு பட்டாப்போலே என்னைப் பெறுகைக்கும் பாடுபட்டவனாயிருந்துவைத்து இப்போது உபேகூஷீத்தால் விடுவேனோ வென்றபடி.

English Translation

O My love, you became the love of lotus-dame! Forming like a dark mountain with a crescent moon on if you came as a boar and took the Earth between your tusk teeth. O Lord who churned the ocean, how can I let you go now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்