விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எனக்கு ஆராஅமுதாய்*  எனதுஆவியை இன்உயிரை* 
    மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்*  இனிஉண்டொழியாய்*
    புனக்காயாநிறத்த*  புண்டரீகக்கண் செங்கனிவாய்* 
    உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு*  அன்பா! என்அன்பேயோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் அன்பே - என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே!
எனக்கு ஆரா அமுது ஆய் - எனக்குப் பரம போக்யனாய்
எனது ஆவியை இன் உயிரை - என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் - இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்:
இனி உண்டொழியாய் - குறையும் புஜித்தேயாக வேணும்.

விளக்க உரை

பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னையுபேகூஷியாதே விரைவில் விஷயீகாரித்தருளாயென்கிறார். இப்பாட்டுக்கு “கோமலரிப்பாவைக் கன்பா! என்னன்பேயோ” என்ற ஈற்றடி உயிராயிருக்கும். ‘அன்பன்’ என்ற சொல்லின் மேல் விளியுருபு ஏற்று அன்பா! என்று கிடக்கிறது; அன்பு என்ற சொல்லின் மேல் விளியுருபு ஏற்று அன்பே! என்று கிடக்கிறது; இதனால், எம்பெருமான் பிராட்டி பக்கலிலே அன்பையுடையவன், ஆழ்வார் பக்கலிலே அன்பே வடிவெடுத்தவனாயிருப்பவன் என்பது தெரிவிக்கப்படும். பிராட்டியிற் காட்டிலும் அதிகமாக என் பக்கலிலே ஸ்நேஹித்தவனா யிருந்துவைத்து இப்போது உபேகூஷிப்பது தகுதியோ? என்றவாறு. எனக்கு ஆரரவமுதாய்-தேவர்களுண்ணும் அமிருதம் போலன்று ஆழ்வாருடைய ஆராவமுது எப்பொழுதும் நாள் திங்களாண்டூழி யூழி தொறும் அப்பொழுதுதைக் கப்பொழுது என்னாராவமுதமே என்னும்படியான அமுதமன்றோ. எனதாவியை இன்எயிரை மனக்கு ஆராமை மன்னி யுண்டிட்டாய்-இங்கு ஆவியென்று உடலைச் சொல்லுகிறது. என்னுடம்பையும் என்னுயிரையும் எவ்வளவதுநுபவித்தாலும் த்ருப்தி பிறவாமே உண்டிட்டாய். இனி யுண்டொழியாய்-நீயே முடிப்பதன்றோ அழகு, நடுவே குறை கிடக்க விடுவதுண்டோ? புக்த சேஷத்தைப் பிறர் புஜிப்பாருண்N;;;டா? நீயே புஜித்துப் பூர்த்திசெய்யுமத்தனை யென்கிறார். மூன்றாமடியினால் திவ்விய மங்கள விக்ரஹ ஸௌந்தாரியத்தைப் பேசுகிறார்; உன் வடிவழகும் கண்ணழகும் வாயழகும் பிராட்டி யோட்டைச் சேர்த்தியழகு மன்றோ என்னை விஷயீகாரித்தன. உனக்கேற்குங் சோல மலரிப் பாவை துல்ய சீலவயோவ்ருத்தாம் துல்யாபிஜந லகூஷணாம், ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸிதேகூஷணா என்று திருவடி சொன்னது காண்க. ‘உனக்கேற்கும்’ என்கிற இந்தச் சந்தையை யடியொற்றியே எம்பெருமானார் கத்யத்தில் பகவந் நாராயணாபி மதாநுரூப என்றருளிச் செய்தது.

English Translation

My sweet Lord, my life, my soul You have drunk me insatiably, now go on drinking me. O Kaya-hued Lord with lotus eyes and coral lips! O The perfect match for lotus dame! O My love!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்