விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உம்பர்அம்தண் பாழேஓ!*  அதனுள்மிசை நீயேஓ* 
    அம்பரம் நல்சோதி!*  அதனுள் பிரமன் அரன் நீ*
    உம்பரும் யாதவரும் படைத்த*  முனிவன் அவன்நீ* 
    எம்பரம் சாதிக்கலுற்று*  என்னைப்போர விட்டிட்டாயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ளும்பரும் - மேலான தேவர்களையும்
யாதவரும் - மநுஷ்யாதி ஸகலசேதநரையும்
படைத்த முனிவன் அவன் நீ - அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ; (இப்படியாயிருக்க)
எம் பரம்  சாதிக்கல் உற்று - என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு
(இவ்வளவும் வர நிறுத்தி)
என்னை போர விட்டிட்டாயே - என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே.

விளக்க உரை

ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார். ளும்பரந்தண் பாழேயோ என்பதனால் மூலப்ரக்ருதிநிர்வாஹத்வம் சொல்லுகிறது. பாழ்நிலமாயிருக்குமதிலே எதையும் பயிர் செங்துகொள்ளலாமாப் போலே சேதநா;க்கு போகமோகூஷங்களை விளைவித்துக் கொள்ளலாம் நிலமாயிரா நின்ற மூலப்ரக்ருதியைப் பாழ் என்ற சொல்லாற் சொல்லுகிறது. ளும்பர்என்றும் அம்தண் என்றும் அதனுடைய மேன்மை சொல்லும் விசேஷணங்கள். அதனுள் மிசைநீயே-ளும்பரந் தண் பாழ் என்று கீழே சொல்லப்பட்ட ப்ரக்ருதியிலே கட்டுப்பட்டு நிற்கிற ஆத்மவர்க்கங்களுக்கும் நிவாஹகனானவனே! என்றபடி. ஆக முதலடியால் சேதநாசேதநங்களை சாரிரமாகக் கொண்டவனே! என்றதாயி;ற்று.

English Translation

O Dark expanse-of-space, and all that is in it! You are the sky, the light, the gods and all else, you are the first-cause of gods and men. Alas, you have left me to bear my burden alone

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்