விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயம்செய்யேல் என்னை*  உன்திருமார்வத்து மாலைநங்கை* 
    வாசம்செய் பூங்குழலாள்*  திருஆணை நின்ஆணை கண்டாய்*
    நேசம்செய்து உன்னோடு என்னை*  உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே* 
    கூசம்செய்யாது கொண்டாய்*  என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னை மாயம் செய்யேல் - என் திறத்தில் வஞ்சனை பண்ணா தொழியவேணும்;
உன் திருமார் வத்து மாலை - உன்னுடையதிருமார் விலேசாத்திய மாலை போன்றவளாய்
நங்கை - ஸகல குணபாரிபூர்ணையாய்
வாசம் செய்; பூ குழலாள் - பரிமளம் மிக்க கூந்தலையுடையவளான
திரு ஆணை - பெரியபிராட்டியாணை:

விளக்க உரை

தம் காரியம் செய்தல்லது நிற்க வொண்ணாதபடி ஆணையிடுகிறாரிப்பாட்டில். ஒன்றும் மாரியஞ் செய்யேலென்னையே என்று கீழ்ப்பாட்டில் சொன்னவுடனே எம்பெருமான் வந்து அபயமளிக்க வேணுமே, அது செய்யக் காணாமையாலே மீண்டும் மாயஞ்செய்யேலென்னை யென்கிறார்அதிகப்படியாக ஆணையுமிடுகிறார். உன்மேலாணை! உன்பெண்பெண்டாட்டிமேலாணை! என்கிறார். உனது திருமார்வுக்கு அலங்காரமாயிருப்பவளும் ஸர்வகந்த: என்கிற வுனக்கும் பரிமளங்கொடுக்குங் கூந்தலை புடையவஉமான பிராட்டியின் மேலாணை. அவளுக்கு வல்லபனான உன்மேலுமாணை. பெரியாழ்வார் வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் உன்றனிந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின்திரு வாணை கண்டாய் என்று பிராட்டியாணை மட்டு மிட்டார்இவர் இருவர் மேலுமிடுகிறார். என் காரியம் செய்து தலைக்கட்டி யல்லது நீங்கள் இட்டவடி பெயரவொண்ணா தென்றபடி. இப்படி ஆணையிட்ட ஆழ்வாரை நோக்கி ‘சேஷயான நாம் செய்தபடி கண்டிருக்கையே சேஷதபூதரான வுமக்கு ஸ்வரூபமாயிருக்க, இங்ஙனே நீர் ஆணையிடுவது ஸ்வருபவித்தங்காணும், என்று எம்பெருமானருளிச் செய்ய தாம் ஆணையிடத் தகுமென்பதை மேல் முழுதுங்கொண்டு உபபாதிக்கிறார். ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி அதனால் ஆணையிடத்தகுமென்று காட்டுகிறபடி. (நேசஞ்செய்து உன்னோடென்னை இத்யாதி) பெரியபிராட்டியர் பக்கலிலும் பண்ணாத ஸ்நேஹத்தை என்பக்கலிலே பண்ணி, ஆத்மபேதமில்லாதபடியன்;றோ என்னைக் கொண்டது. இரண்டு தத்வமென்று பிரித்துக் காண வொண்ணாதபடி யன்றோ கலந்து பாரிமாறிற்று. கூசஞ் செய்யாது கொண்டாய் என்பக்கலிலுள்ள அயோக்யதைகளைக் கண்டால் கூசிக் காதவழிக்கப்பால் செல்ல வேணுமே. சிறிதும் கூசாமலன்றோ பாரிக்ரஹித்தாய். ஆனபின்பு என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ-உன்னைக் கிட்டியநுபவிக்கும்படி பண்ண வேணும்.

English Translation

Pray do not trick me, I swear upon the fair lady of the lotus residing on your chest, and upon you, take note! You openly made love and blended into my soul. Alas, now you must call me unto you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்