விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விதிவகை புகுந்தனர்என்று*  நல்வேதியர்* 
    பதியினில் பாங்கினில்*  பாதங்கள் கழுவினர்*
    நிதியும் நல்சுண்ணமும்*  நிறைகுட விளக்கமும்* 
    மதிமுக மடந்தையர்*  ஏந்தினர் வந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பதியினில் - தம்தம்திவ்யஸ்தானங்களிலே
பாங்கினில் - உபசாரங்களுடனே
பாதங்கள் கழுவினர் - வந்தவர்களது திருவடிகளை விளக்கினார்கள்
நிதியும் - ஸ்ரீவைஷ்ணவர்க்குநிதியான திருவடி நிலைகளையும்
நல் சுண்ணமும் - ஸ்ரீசூர்ணத்தையும்

விளக்க உரை

மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர். விஷயங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே இருந்து வைத்து அநந்ய ப்ரயோஜநராய் பகவத் குணங்களை யநுபவிக்கப் பெற்ற மஹா புருஷா;களாய் விண்ணுளார்லும் சீரியர் என்று கொண்டாடப் பட்டவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது நம்முடைய பரம பாக்ய மென்று ஒரு தடைவ சொன்னால் போதுமோ? என்கிறார்கள். நல் வேதியர் என்றது நல்ல வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டவர்களென்றபடி. யத்ரர்ஷய ப்ரதமஜா யேபுராணா என்றும், யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா: என்றும், தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே என்றும் வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்டவர்களன்றோ. இப்படி கொண்டாடினவளவோடு நில்லாமல் அனந்த வைநதேயாதிகளான அவர்கள் தங்கள் திருமாளிகைகளிலே கொண்டுசென்று ஸ்ரீ பாத தீர்த்தமும் சேர்த்துக் கொண்டமை சொல்லுகிறது இரண்டாமடியில். பதியினில்-பதியென்று இருப்பிடம்; தம்; தம் திருமாளிகைகளிலே கொண்டு புக்கு என்றபடி. இங்கே ஈடு;-“இவனொரு ஸம்ஸாரி சேதநன், நாம் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் என்று வாசிவையாதே இவனை ஸிம்ஙாஸனத்திலே உ பர வைத்து அவர்களுக்குப் பாங்காகத் தாங்களிருந்து திருவடி விளக்குவர்கள்.” நிதியும் நற்சுண்ணமும்-அவ்வளவிலே பகவத்பாரிசார்கைகள் வந்து எதிரேற்பர்கள்; ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் திருச்சுண்ண ப்ரணாதத்தையும் நிறை குடங்களையும் (பூர்ண கும்பங்களையும்) மங்கள தீபங்களையும் ஏந்திக் கொண்டு வந்தனர். இங்கு மதிமுக மடந்தையர் என்றதன் உட்கருத்தை நம்பிள்ளை விவாரிக்கிறார் காண்மின்;-“தேசாந்தரம் போன ப்ரஜை வந்தால் தாய்முகம் குளிர்ந்திருக்குமாபோலே ஹா;ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலேயிருக்கிற முகங்களை யுடைவர்கள் வந்து எதிரிகொண்டார்கள்.”

English Translation

Vedic seers praising their forture, washed the devotee's feet, while moon-faced dames greeted him with Purna kumbha, lamp and saffron-water

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்