விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடிஅடியார் இவர்*  கோவிந்தன் தனக்குஎன்று* 
    முடிஉடை வானவர்*  முறைமுறை எதிர்கொள்ள*
    கொடிஅணி நெடுமதிள்*  கோபுரம் குறுகினர்* 
    வடிவுஉடை மாதவன்*  வைகுந்தம் புகவே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவர்  கோவிந்தன் தனக்கு குடி அடியார் என்று - இவர்கள் பகவார்க்குக் குலங்குலமாக அடியவர்கள் என்று சொல்லி
முடி உடை வானவர் - சேஷத்வத்துக்குச் சூடின முடியையுடைய நித்ய ஸூரிகள்
முறை முறை - சிரமம் தப்பாமல்
எதிரிகொள்ள - ‘ஸ்வாகதம்’ என்று சொல்லி யெதிரிகொண்டழைக்க
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புக - அழகிய வடிவு படைத்த எம்பெருமானுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே பிரவேசிக்கைக்குறுப்பான

விளக்க உரை

ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில், நித்யர்களும் முக்தர்களும் முறை முறையே எதிரிகொள்ளுகிறார்களாம்; என்ன பாசுரம் சொல்லிக்கொண்டு எதிரிகொள்ளுகிறர்களென்னில்; (இவர் கோவிந்தன் தனக்குக்குடியடியார் என்று) நித்ய ஸூரிநாதனாயிருக்கிற எம்பெருமான் அந்த நித்யஸூரி நாதத்வத்தைக் குறையாக நினைத்து மண்ணுலகிலே இடைக்குலத்திலே வந்து பிறந்து பசுமேய்க்கையாகிற இழிதொழில் செய்து இதையே தனக்குப் பெருமேன்மையாக நினைக்கின்றவனென்று இந்த ஸௌலப்ய குணத்திலே தோற்று அடிமைப் பட்டவர்களிவர்கள்-என்று சொல்லிக்கொண்டு எதிரிகொள்ளுகிறார்களாம் கீழ்ப்பாட்டில் அர்ச்சாவதாரப்ராவண்யத்தைச் சொல்லி ஸத்தாரம் பண்ணினார்களென்றது; இப்பாட்டில் விபவாவதார ப்ராவண்யத்தைக் சொல்லி ஸத்சாரம் பண்ணினர்களென்கிறது. முடியுடைவானவர்-எம்பெருமாளுக்குத்தானே திருவபிஷேகமுள்ளது; நித்யஸூரிகளுக்கும் அது உண்டோவென்கிற சங்கைக்கு நம்பிள்ளை பாரிஹாரமுணர்த்துகிறார்-“அவன் ரகூஷகத்வத்துக்கு முடிசூடியிருக்கும்; இவர்கள் அடிமை செய்கைக்கு முடிசூடியிருப்பர்கள்” என்று. கொடியணிநெடுமதின்கோபுரம்குறுகினர்-இவர்கள் வருகிறார்களென்று கொடிகளாலே அலங்காரிக்கப்பட்டிருந்த திருமதிள்கள் சூழ்ந்த திருக்கோபுரத்தைச் சென்று கிட்டினார்கள். (வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே) ஏற்கெனவே எம்பெருமான் வடிவில்லாதவனல்லன்; அப்படியிருந்தும் இப்போது ‘வடிவுடைமாதவன்’ என்று சொல்லுவதன் சுருத்தை நம்பிள்ளை யெடுத்துக் காட்டியருளுகிறார் காண்மின்; “யுவேவ வஸீதேவோபூத் என்று, கம்ஸவதத்துக்குப் பின்பு பிள்ளையைக் கண்ட ஸ்ரீ வஸீதேவரையும் தேவகியாரையும் போலவும், பெருமாளைக்கண்ட சக்ரவர்த்தி புநா; யுவேவ என்று சொல்லிப்பட்டாப்போலவும் தங்கள் வரலாலுண்டான ஹா;ஷத்தாலே புதுக்கணித்தது வடிவு” இங்ஙனே வடிவு புதுக்கணித்ததானது பெருமாளுக்கு மாத்திரமன்று, பிராட்டிக்குங்கூட என்று காட்டுதற்காக மாதவன் என்றது.

English Translation

Gods in rows teamed to see and said, "Here comes Govinda's bonded serf!", then climbed on the high walls of the festooned Gopuram, to catch a glimpse of the devotee, -cast in Madava's image, -as he entered Vaikunta

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்