விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மடந்தையர் வாழ்த்தலும்*  மருதரும் வசுக்களும்* 
    தொடர்ந்து எங்கும்*  தோத்திரம் சொல்லினர்*  தொடுகடல்-
    கிடந்த எம்கேசவன்*  கிளர்ஒளி மணிமுடி* 
    குடந்தை எம்கோவலன்*  குடிஅடி யார்க்கே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குடந்தை - திருக்குடத்தையிலே கண் வளர்ந்தருளுகிற
எம் கோவலன் - எமது கோபாலனுக்கு
குடி அடியார்க்கு - குலங்குலமாக அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே
மடந்தையர்வா ழ்த்தலும் - அப்ஸலஸ்ஸீக்கள் பல்லாண்டு பாடினவளவிலே
மருதரும் வசுக்களும் - மருந்துக்களும் அஷ்டவசுக்களும்
எங்கும் தொடர்ந்து - போமிடமெங்கும் தொடர்ந்துவந்து

விளக்க உரை

மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது. வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே என்று கீழ்ப்பாட்டில் சொன்னது தன்னையே மீண்டும் “மடந்தையர் வாழ்த்தலும்” என்று அநுபாஷிப்பதானது அந்த வாழ்த்துதலிலுண்டான ஆதாரதிசயத்தினாலென்க. திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் வாழ்த்தின வளவிலே, (மருதரும் வசுக்களும் எங்குந்தொடர்ந்து தோத்திரம் சொல்லினர்). மருத் கணங்களும் வஸீ கணங்களும் தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாமிடமெங்குஞ் சென்று புகழ்ந்தார்கள். இங்கே ஈடு!-“ஒரு நிமேஷ மாத்திரத்திலே ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரத்தேறப் போமவர்களாகையாலே, தங்கள் எல்லைக்குள்ளில் புகழ்ந்தவளவால் பரியாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள். அவர்கள் தாங்கள் சடக்கெனப்போகிற விதுக்கு அடி என்னென்னில்; தாங்கள் கண்ணன் விண்ணுற்ர் தொழவே சாரிகின்றது சங்கம் என்றும் காண்பதெஞ்ஞான்று கொலோ என்றும் மாகவைகுந்தம் காண்பதற்கென மனமேகமெண்ணும் என்றும் உடன் கூடுவதென்று கொலோ என்று மிருக்கையாலும் ந ஜீவேயம் கூஷணமபி என்றிருக்குமவன் கருத்தறியுமவர்களாகையாலும்” என்று. வழியில் ஆதாரிப்பவர்களெல்லாரும் என்னவென்று சொல்லி ஆதாரிக்கிறார்களெனன்னில்; (குடந்தை யெங்கோவலன் குடியடியார்க்கே) இவர்கள் திருக்குடந்தை யெம்பெருமானிடத்திலே குடிகுடியாக அடிமைப்பட்டவர்களென்று சொல்லிக் கொண்டு ஆதாரிக்கிறார்களாம். இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட மறக்கமுடியாதபடி திருக்குடந்தைப்பதியின் அநுபவம் செல்லாநின்றதென்று தெரியவரும். திவ்யப்பிரபந்தங்களெல்லாம் லோபமடைந்திருந்தவொரு கால விசேஷத்தில் ஸ்ரீமந் நாதமுன்கிள் அவற்றைப் புநருத்தாரஞ் செய்வதற்குத் திருக்குடந்தைப்பதி விஷயமான ஆராவமுதே யென்கிற திருவாய்மொழியே மூலகாரணமாயிற்றென்று ஜதியுமுளது. த்ர்காலஜ்ஞரான ஆழ்வார் திருவுள்ளத்தில் இது முன்னமே படிந்திருந்தனால் இதையிட்டும் இங்குத் திருக்குடந்தைப் புகழ்ச்சி ப்ராப்தமாயிற்றென்னலாம். திரமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தையே பின்பற்றிப் பேசுகிறவராதலால், நம்மாழ்வார்க்குத் திருக்குடந்தையில் அளவுகடந்த அபிநிவேச முண்டென்பதை யறிந்தே தாம் திருமொழிபாடத் தொடங்கும்போதே தூவி சேரன்னம் துணையோடும் புணரும் சூழ் புனற்குடந்தையே தொழுது என்றும், சொற்பொருளாளீர்சொல்லுகேன் வம்மின் சூழ்புனற் குடந்தையே தொழுவின் என்றும் அருளிச்செய்து, சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தின் முடிவிலும் தண்குடத்தைக் கிடந்தமாலை நெடியானையடிநாயேன் நினைந்திட்டேனே என்று திருக்குடத்தையையே பேசித் தலைக்கட்டினார். அன்றியும் திருக்குடந்தைக் கென்றே தனிப் பிரபந்தமொன்று (திருவெழு கூற்றிருக்i) திருவாய்மலர்ந்தருளினார்.

English Translation

Marut and Vasus joined in worship as damsels cheetred in joy, to see the bounded serf of the Lord, -the ocean-reclining Kesava, radiant-crowned Gopala, Lord of Kundandai, -on his journey homeward bound

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்