விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொழுதனர் உலகர்கள்*  தூபநல் மலர்மழை- 
    பொழிவனர்*  பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*
    எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்*  முனிவர்கள்* 
    வழிஇது வைகுந்தர்க்கு என்று*  வந்து எதிரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூபம் - தூபம் ஸமரிப்பிப்பதோடு
நல் மலர்மழை - நன்றான புஷ்பவர்ஷத்தைப் பொழிகின்றவர்களாய்க்கொண்டு
உலகர்கள் - அந்தந்தலோகங்களிலுள்ளவர்கள்
தொழுதனர் - தொழுதார்கள்;
முனிவர்கள் - ஆங்காங்குள்ளமுனிவர்கள் (தாங்கள் மௌனமாயிருக்கும் விரதத்தை தவிர்ந்து)

விளக்க உரை

ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்;டாடும்படியை யருளிச்செய்கிறார். உலகர்கள் தொழுதனர்-இங்குப் பொதுவாக உலகர்களென்றது ஆதிவாஹிக தேசங்களிலுள்ளார்களைச் சொல்லும். அவர்கள் கைபடைத்த பயன் பெற்றோற்மென்று தொழுது நின்றார்கள்; அவ்வளவோடும் நில்லாமல் தூபத்தையும் நல்ல மலர்மழையையும் ப்ரயோகித்துத் தொழுதார்கள். என்னபாசுரஞ் சொல்லிக் கொண்டு தொழுதார்களென்னில்; (பூமியன்றளத்தவன் தமர்முன்னே) ‘எம்பெருமான் உலகளந்தருளின் செயலுக்குத்அதற்கு று அடிமைப்பட்டவர்களன்றோ இவர்கள் என்று சொல்லிக் கொண்டே தொழுதார்களாயிற்று. அங்குள்ள முனிவர்களும் இரண்டருகும் நின்றுகொண்டு ‘இங்கே யெழுந்தருளவேணும், இங்கே யெழுந்தருளவேணும்’ என்று நல்வரவு கூறி உபசாரித்தார்கள்; பரமபதம் போவார்க்கு இதுவே வழியென்று எதிரேவந்து சொன்னார்கள்.

English Translation

When they saw the devotees of the Earth, mesuring Lord, they rained flowers, lit incense and offered worship. Bards stood on either side and songs "Hall" and said, "This way to Vaikunta"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்