விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
    பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*
    நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
    தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாரணன் தமரை கண்டு - பாகவதர்களைக் கண்டு
நல் நீர் முகில் - நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது
உகந்து - மகிழ்ந்து
உயர் விண்ணில் - உயர்ந்த ஆகாசத்திலே
பூரணம் பொன் குடம் பூர்த்தது - பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது

விளக்க உரை

மேலுண்டான லோகங்கள் பண்;ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்; நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்களானவை நாராயணன் தமரைக் கண்டவுகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக அமைந்தன. கீழ்ப்பாட்டிலே சூழ்விசும்பணி முகில் தூரியமுழக்கினவென்று சொல்லியிருக்கச் செய்தேயும் அந்த ஒரு கிஞ்சித்காரமும் பண்ணினபோலும். “ஆகாசசரரான தேவர்களாலே ஆகாசமெல்லாம் பூர்ண கும்பம் வைக்கப்பட்டதென்றுமாம்’ என்பது ஈடு. நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன-நீரணிந்த கடல்களானவை ஒரு கால் ஆடினோமே யென்றிராமல் ஹா;ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்துக்கொண்ன். (நெடுவரையித்யாதி.) அந்தந்த லோகங்களிலுள்ளோர் பெரிய மலைபோலே யிருந்துள்ள தோரண ஸ்தம்பங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள். உலகு என்றது உலகர் என்றபடி; உயந்தோர் என்று பொருள்.

English Translation

On seeing Narayana's devotee, the rain cloud joyously filled gold-pots in the sky, the oceans stood and cheered in joy. The mountains made festoons for him, and all the words bowed in worship

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்