விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
    ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*
    ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
    வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்டு உகந்து - வரக்கண்டு களித்து
சூழ் விசும்பு - எங்கும்பரந்த ஆகாசத்திலே
அணிமுகில் - அழகிய மேகங்கள்
தூரியம் முழக்கின - வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன;
ஆழ் கடல் - ஆழமான கடல்கள்

விளக்க உரை

திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி, எங்குஞ் சூழ்ந்த ஆகாசப்பரப்படங்கலும் ஆபரணம் போன்று விளங்குகின்ற மேகங்களின் முழக்கம் மங்கள வாத்ய கோஷம்போல் செவிப்பட்டது. ஆழ்ந்த கடல்களானவை அலையா நின்றுள்ள திரைகளாகிற கைகளை யெடுத்துக் கூத்தானெ. கீழே சொன்ன மங்களவாத்ய கோஷத்திற்குச் சேர இந்த நா;த்;தனமும் மங்கலமாகக் கூடிற்றென்கை. ஸப்தத்வ{பங்களும் புதுக்கணித்தனர்; (அல்லது) உபஹாரங்களை ஏந்தி நின்றன. இதெல்லாம் யாரைக் கண்டென்ன; (என்னப்பன் வாழ்புகழ் நாரணன்தமரைக் கண்டுகந்தே) ஸ்ரீவைகுண்டத்திற்கு வரப்புறப்பட்ட மஹாபாகவதர்களைக் கண்டு. இது ஒருவருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செய்ததன்று; ப்ரீதி உள்ளடங்காமற் செய்தது என்பதைக் காட்டும் உகந்து என்பது.

English Translation

Clouds in the sky played horns like heralds, waves in the ocean clapped and danced. The seven continents stood with gifts, to see the devotee of eternally-praised Narayana homeward-bound

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்