விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
    நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*
    சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
    வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அல்லல் நில்லா - துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய்
நீள் வயல் சூழ் - பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான
திருப்பேர் மேல் - திருப்பேர் நகர் விஷயமாக
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன் - நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் - தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார். திருப்பேர் நகர்க்கு ‘நீள்வயல்சூழ்’ என்பது போல ‘நில்லா வல்லல்’ என்பதும் ஒரு விசேஷணமாயிருக்கிறது. துக்கங்களானவை ‘இது நமக்கு உறைவிடமன்று’ என்று தானேவிட்டு ஓடிப்போம்படியான இடமாம் திருப்பேர் நகர். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தலத்தையுத்தேசித்து ஆழ்வாரருளிச்செய்த இப்பதிகம் வல்லார் யாவரோ அவர்களிட்டது சட்டமாயிருக்கும் திருநாடு என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

This decad of the thousand songs by Satakapan of kurugur where good men live, on the Lord of Ten-Tirupper surrounded by big fields will secure for devotees the radiant Vaikunta

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்