விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு- 
  எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்*  ஏழை மனிசர்காள்!*
  கண்ணுக்குஇனிய*  கருமுகில் வண்ணன் நாமமே- 
  நண்ணுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணில் பிறந்து - கண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும் - பின்பு மண்ணாய்விடுகிற
மானிடர் - அல்பமநுஷர்களுடைய
பேர் இட்டு - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு - ஆமுஷ்மிக பலத்தில்

விளக்க உரை

“மண்ணாய் நீரெரிகல் மஞ்சலரவு மாநாசமுமாம் புண்ணாராக்கை “மஞ்சுசேர்வானெரி நீர் நிலம் காலிகை மயங்கி நின்ற அஞ்சு சேராக்கை” என்றபடி- தேஹத்திற்குப் பஞ்சபூதங்களும் உபாநாநமாகிலும் அவற்றுள் பார்த்திவபாகமே (- அதாவது மண்பாகம்) அதிகமாயிருப்பது பற்றி, அம்மண்ணில் நின்றும் தேஹத்துக்கு உற்பத்தியென்பார், “மண்ணிற் பிறந்து” என்றார். தேஹம் உருக்குலைந்தால், ‘காரியத்திற்குக் காரணத்திலே லயமாகக் கடவது’ என்ற முறைமையின்படி- மறுபடியும் மண்ணாய்ப்போகக் கடவதானமை பற்றி “மண்ணாகும்” என்றார். அங்கு- பரமபத்திலே என்றபடி

English Translation

O Poor people! Mindlessly you give your children names of mortals who are born of the Earth and who become the earth again. Call them by the name of the Lord whose dark cloud-hue is pleasing to the eyes. Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்