விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
    பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*
    கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
    அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈதே இன்னம் வேண்டுவது - இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்;
கற்றார் - குரு முகமாகக் கற்றவர்களாயும்
மறைவாணர்கள் - வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ் - வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும்
திருப்பொராற்கு அற்றார் - பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான்

விளக்க உரை

ஈட்டு ஸ்ரீஸூக்திகள் சாஸ்த்திரார்த்தமே வடிவெடுத்தவை காணீர்;- “அவன் தானே செய்தானென்எமன்று அவருக்கு வைஷம்யமும் நைர்க்ருண்யமும் ஸர்வ முக்தியும ப்ரஸங்கியாதோவென்னில், இத்தலையதில் ருசியையபே கூஷித்துச் செய்கையாலே அவருக்கு அவை தட்டாது. அது ஹேதுவென்று ஈச்வரனுக்கு உத்தரமானாலோ வென்னில்; அது உபாயமாக மாட்டாது, பலவியாப்தமான திறே உபாயமாவது. இந்த ருசி அதிதார்ஸ்வரூபமாகையாலே தத்வதிசேஷணமாமித்தனை. உபாயம் ஸஹகாரிநிரபேகூஷமாகையிலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது. இது உபாயமாகாமையாலே இவர்க்கு இல்லையென்னலாம்; ஸர்வமுக்தி ப்ரஸங்க பாரிஹாரர்த்தமாக அவருக்கு உண்டென்னவுமாம்” என்று. சாஸ்த்ரார்த்த நற்றெளிவை நன்கு பிறப்பிக்க வல்ல இந்த ஸ்ரீஸூக்திகளைக் கண்டுவைத்தும் சிலர்இத்திலையிலுள்ள ஸ்வல்பத்தை உபாயமென்று கூறி முஷ்டி பிடிப்பது வியப்பே. உற்றேன்- நிமஜ்ஜதோந்த பவார்ணவாந்தச் சிராய மே கூலமிவாஸி லப்த: என்ற ஆளவந்தர் ஸ்ரீஸூக்தியை இதற்குச் சந்தையாக அநுஸந்திப்பது. உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் -இங்குப் பணி செய்தலாகச் சொல்லுகிறது திருவாய்மொழி பாடுகையை. உகந்து பணிசெய்கை ஸாதனமாய், அதற்கு ஸாத்யம் வேறொன்று இருப்பதாக ஆழ்வார் திருவுள்ளமன்று; உகந்து பணி செய்கையும் பாதம் பெறுகையும் ஒன்றேயாகக் கொள்க. ஈதே யின்னம் வேண்டுவது என்பதனால் இது விளக்கப்பட்டதென்க. இனி பின்னடிகள் பொதுவான லோகோக்தியாகச் சொல்லுகிறபடி. (கற்றார் மறை யித்யாதி.) குருகுலவாஸம் பண்ணிப் போது போக்கினவர்களாய் வேதத்துக்கு வ்யாஸபதம் செலுத்தவல்லவர்களான மஹான்கள் அநுபவித்து வர்த்திக்குமிடமாம் திருப்பேர்நகர்; அவ்விடத்து உறையும் பெருமாளுக்கு அற்றுத்தீர்ந்த வடியார் களுக்கு துக்க ப்ரஸக்தி யுண்டோ வென்றாராயிற்று “திருப்பேராற்கு” என்றதை முன்னிலையில் வந்த படர்க்கையாகக்கொண்டு இதுவும் எம்பெருமானை நோக்கியே சொல்லுகிறதென்று கொள்ளலும் நன்றே. திருப்பேராற்கு-திருப்போரிலே வர்த்திக் கிறவுனக்கு என்றபடியாம். அற்றாரடியார் தமக்கு - அற்றவாகளான அடியவாரானாக்கு என்று இருவகையாகவும் பொருள் கொள்வர்.

English Translation

My Lord I have rendered joyful service and attained your feet. This is all ask for. No more shall miseries besiege the devotees of the Lord in Tirupper where many Yedic scholars live

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்