விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்று என்னைப் பொருளாக்கி*  தன்னை என்னுள் வைத்தான்* 
    அன்று என்னைப் புறம்போகப்*  புணர்த்தது என் செய்வான்?*
    குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    ஒன்று எனக்குஅருள்செய்ய*  உணர்த்தல்உற்றேனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்று என்ன திகழ்மாகங்கள் - குன்றுகளிவை யென்னலாம்ப விளங்குகின்ற மாடங்களினால்  சூழப்பட்ட
திருபேரான் - திருப்பேர் நகர்க்குத் தலைவனான எம்பெருமான்
ஒன்று - இத்தனைநாள்கை விட்டிருந்ததற்குத் ஹேது சொல்லுவதோ, இன்று கைக்கொண்டவதற்கு ஹேது சொல்லுவNற் இரண்டி லொன்றை
எனக்கு அருள் செய்ய - எனக்கு அருளிச்செய்;ய வேணுமென்று
உண்ர்த்தல் உற்றேன் - விஞ்ஞாபிக்கின்றேன்.

விளக்க உரை

எம்பெருமான் பதில் சொல்லுவதாயிருந்தால் எவ்விதமாகச் சொல்லலாம்? என்று பாரிப்போம் ‘ஆழ்வீர்முன்பு உமக்கு ருசியில்லாமையாலே நாம் உபேகூஷித்திருந்தோம்; இன்று நீர் ருசிபெற்று ஸதாநுஷ்டாநமும் பணிணனீராகையாலே ஆத்ரம் செய்தோம்; என்று ஒரு பதில் சொல்லலாம்; ஆனால் அப்படி சொல்வதற்கு இங்கு விஷயமில்லை. இவர் தலையிலே ஒரு ஸாதனாநுஷ்டானம் காணாமையாலே. ஆனாலும் ஒரு பதில் சொல்லலாம்-“என்;னுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வப்ரவ்ருத்தியிலே நீர் இதுவரையில் ஊன்றியிருந்தீர்; அது என்னை விலக்கின படியாயிருந்தது; விலக்காத ஸமய்ம் எதிரிபார்த்திருந்தேன்; அது இப்போது கிடைத்தமையாலே ளும்மை யாதாரித்தேன்; அன்றியும், என்னைத் தவிர்நத மற்றவற்றில் ஸாதநத்வ புத்திபண்ணிப் போந்தீர் இதுகாறும்; இப்போது அது தவிர்ந்து என்னையே உபாயமாகக் கொண்டீர்; ஆதலால் ஆதாரித்தேன்” என்று சொல்லலாம். ஏன் இந்த பதிலை எம்பெருமான் சொல்லவில்லையென்னில்; இதுவொரு பதிலாகுமோ? அசட்டுத்தனமான பதில்றோவிது; சைதந்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷயபரியாயமான ருசியை ஸாதநமென்ன வொண்ணுமோ? உபாயத்வத்தை பேறிட்டுச் சொல்ல எப்படி முடியும்! நம்முடைய ஸ்வாதந்திரியத்தாலேயே உபேகூஷித்திருந்தோம், ஸ்வாதந்திரியத்தாலேயே ஆதாரித்தோம்; இதை ஆழ்வார் நன்கு தெரிந்துகொண்டு கேள்வி கேட்கிறாராகையாலே இவர்க்கு நாம் ஒரு பதிலும் சொல்லிப் பிழைக்க முடியாதென்று பேசாதே கிடந்தான். ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102) “இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113) “வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணையளவும்; மேலே நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க …… இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க” என்றருளிச் செய்ததும் மணவாள்மாமுன்கிளின் வியாக்கியானத்தோடும் நம்முடைய விசேஷ விவரணங்களோடும் இங்கே அநுஸந்தேயம். நாஸெவ புருஷகாரேண நாசாப்யந்யேந ஹேதுநா கேவலம் ஸ்வேச்சயைவாஹம் பிரேNகூஷ ஞ்சித் கதாச்ந என்றவனிறே அவன்தான்.

English Translation

The Lord residing in Tirupper with mountain-like mansions, today has made a person of me, sitting in my heart, why had he left me to wander so long?, -I begin to wonder, pray let him answer

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்