விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உண்டு களித்தேற்கு*  உம்பர்என் குறை*  மேலைத்- 
    தொண்டு உகளித்து*  அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
    வண்டு களிக்கும் பொழில்சூழ்*  திருப்பேரான்* 
    கண்டு களிப்ப*  கண்ணுள்நின்று அகலானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு களிக்கும் பொழில் சூழ் - வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான் - திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான்
கண்டு களிப்ப - தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு
கண்ணுள் நின்று அகலான் - என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான்
உண்டு களித்அதற்கு கு - இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு

விளக்க உரை

கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில். உண்டு களித்அதற்கு கு ளும்பர்என்குறை?- இங்கிருந்தே இப்படிப்பட்ட அநுபவம் பெற்றுக் களிப்பதைவிட பரமபதாநுவத்தில் என்ன விசேஷமுள்ளது? அதில் அவேiகூஷயுடையோமல்லோம் என்பது கருத்து. மேலைத் தொண்டு உகளித்து-மேலான தொண்டு-திருவாய்மொழி பாடுகை; அதனால்லுண்டான உகப்பானது தலைமண்டையிட்டு (அதாவது) அதிசயித்து. அந்தியாலே தொழுஞ் சொல்லுப்பெற்றேன் -முமுகூஷூப்படியில் “அந்திதொழுஞ் சொல்லென்கையாலே பலஞ் சொல்லிற்று” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம். கைங்கரிய தொழுஞ்சொல் நமச்சப்தம்; இதுதான் முடிவான பேறு; அதனையும் இங்குப் பெற்றேன் என்றாராயிற்று. நம இத்யேவ வாதிந: (வண்டு களிக்கும் இத்யாதி) -வண்டுகள் மதுபானம் பண்ணிக் களிக்கிற போழில்காளலே சூழப்பட்ட திருப்பேர் நகாரிலே வர்த்திக்கிற பெருமான் உன்னை மெய்கொள்ளக் காண விருன்பு மென் கண்களே என்று விடாய்த்த எனது கண்கள் கண்டு களிக்கும்படியாகக் கண்ணுக்கே இலக்காயிரா நின்றான்; நான் போகச் சொல்லிடும் கண்வட்டத்தில் நன்றும் அகலுகிறானல்லன். இப்படி அவழன யநுபவித்துக் களிக்கப்பெற்றவெனக்கு மேலொரு குறையுண்டோ? என்றதாயிற்று.

English Translation

With surging love me heart has reached the last word. My Lord of Tiupper surrounded by bee-humming groves remains in my eyes for me to rejoice forever. Relishing this taste, now what do I lack hearafter?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்