விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருப்பேர் நகரான்*  திருமாலிருஞ்சோலைப்* 
    பொருப்பே உறைகின்றபிரான்*  இன்றுவந்து*
    இருப்பேன் என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்* 
    விருப்பே பெற்று*  அமுதம்உண்டு களித்தேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்று வந்து - இன்று என்பாலெழுந்தருளி
இருப்பேன் என்று - ளும்மிடத்திலேயே யிருக்கக் கடவேனேன்று சொல்லி
என் நெஞ்சு நிறைய புகுந்தான் - என்னுள்ளம் பூர்ணமாகும் படி புகுந்தான்;
விருப்பே பெற்று - அவருடைய அபிமானத்தைப் பெற்று
அமுதம் உண்டுகளித்தேன் - அம்ரதபானம் பண்ணிக் களித்வனாயினேன்.

விளக்க உரை

எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார். திருப்பேர் நகரானென்றும் திருமாலிரஞ்சோலையுறை கின்ற பிரானென்றும் இரண்டு திவ்ய தேசங்களை யிங்குச் சொன்னது சீரார் திருவேங்கடமே திருக்கோவலுற்ரே மதிட்கச்சியூரமே என்றோதப்படுமெல்லாத் திருப்பதிகளையுஞ் சொன்னபடி. இப்படி அளவுகடந்த தேச விசேஷங்களைத் தனக்கு இருப்பிடமாக வுடையவன், இன்று வந்து -இப்படி வரவேணுமென்கிற நினைவு நேற்று இன்றியே யிருக்க இன்று வநததாகச் சொல்லுகையாலே நிர்ஹேதுகமாக வந்தமை தெரிவித்தபடி. வரும்போது ‘இருப்பேன்’ என்று சொல்லிக்கொண்டே வந்தானாயிற்று. பெருமாள் அரண்யத்திலே ஜடாயு மஹாராஜரைக் கண்டபோது இளையோனே நோக்கி இஹவத்ஸ்யாமி ஸெமித்ரே! ஸாரித்த மேதேநரைக் பகூஷிணா என்று இவர் சிறிகின்கீழே வர்த்திக்கப் பாரா நின்றோ மென்றாப்போலே. என்னெஞ்சு நிறையப் புகுந்தான் -‘நம்முடைய ஹ்ருதயத்திலே இருக்கவேணுமென்று இவனாசைப்பட்டால் இருந்துபோகட்டுமே என்று இசைவு காட்டாதிருந்த என்னெஞ்சிலே நிறையப் புகுந்தானென்கை. விருப்பேபெற்று அமுதமுண்டு கஸித்தேன் கம்ஸ சிசுபாலாதிகளின் நெஞ்சிலும் எம்பெருமானிருப்பதுண்டு; அப்படி யின்றிக்கே அபிமாந பஹூமானங்களோடே இருக்கப்பெற்றேனாதலால் இதுவே அம்ருதபானமாகப் பெற்றே னென்றவாறு.

English Translation

The Lord of Tirupper, Lord in Malirumsolai, has come to stay and fill my heart forever. Tasting the cool ambrosia of liberation, I rejoice to my satisfiaction!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்