விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானே தருவான்*  எனக்காய் என்னோடுஒட்டி* 
    ஊன்ஏய் குரம்பை*  இதனுள் புகுந்து*  இன்று-
    தானே தடுமாற்ற*  வினைகள் தவிர்த்தான்* 
    தேனேய் பொழில்*  தென்திருப்பேர் நகரானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு வானே தருவான் - எனக்கு (இன்று) திருநாடு தந்தருள்பவனாய் ஸங்கல்பித்துக்கொண்டு
என்னோடு ஒட்டி - என்னோடே ப்ரததிஜ்ஞை பண்ணி
ஊன் ஏய் குரம்பை இதனாள் - மாம்ஸளமான இந்த சாரிரத்தினுள்ளே
இன்று தானே புகுந்து - இன்று தானே வந்து புகுந்து
தடுமாற்றம் வினைகள் தவிர்த்தான் - தன்னைத் பிரிந்து தடுமாறு கைக்கூடியான புண்யபாவங்களைப் போக்கி யருளினான்.

விளக்க உரை

திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார். வானே தருவானெனக்காய் -எனக்கு வானே தருவானாய் என்று இயைத்துக்கொள்வது. என்னை இங்கே வைத்து, தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொல்லுவிக்குஞ் காரியம் தலைக்கட்டு கையாலே இங்குநின்றுங் கொண்டுபோய்த் திருநாட்டிலே வைப்பதாகக் கருதினான். அநாதிகாலமாக ஸம்ஸாரியாய்ப் போந்தவெனக்கு நிதய ஸூரிகளிருப்பைத் தருவானாக ஸங்கல்பித்ருளினான். என்னோடு ஒட்டி-என்னோடே சபதம்பண்ணி யென்றபடி. எவ்விதமான சபதமென்னில்; இன்று ஆழ்வார்க்குத் திருநாடு கொடுப்பதோ, அல்லது திருநாட்டுக்குத் தலைவனென்னும் பெயரை நானிழப்பதோ இரண்டத்தொன்று செய்யக்கடவேன் என்ற சபதமாகக் கொள்ளலாம். இவ்விடத்து இருப்பத்துநாலாயிரப்படியிலும் ஈடு முப்பத்தாறாயிரப்படியிலும் அராவணமராமம் என்று என்னோடு ஸமயம்பண்ணி என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது. இதனால் கீழே முதற்பத்தில் யானொட்டி யென்னுள என்கிற பாட்டில் அத்யமே மரணம் வாபி தரணம் ஸாதரஸ்ய வா என்கிற ஸ்ரீராமயண ச்லோவில்லை” என்று அருளிச்செய்திருந்த ஸ்ரீஸூக்திப ற்டஸ்கலனத்தாலே “இத்தை முடித்தல் கடத்தல்” என்று விழுந்திட்டு விபாரிதார்த்ப்ரத்யாயகமாய் விட்டதென்று நாம் மிக விர்வாக நிருபணம் பண்ணியிருந்தது நன்றேயென்று ஸ்தாபிதமாயிற்று. எங்ஙனே யென்னில்; அராமண மராம் வா என்ற இந்த ப்ரதிஜ்ஞையும் அத்ய மே மரணம் வாபி தரண்ம் ஸாகரஸய் வா என்ற அந்த ப்ரதிஜ்ஞையும் ஒத்திருக்க வேணுமென்பது சொல்லாமலே விளங்கும். ‘இராவணணையாவது தொலைக்கிறேன், அல்லது இராமனாகிற நானாவது தொலைந்து போகிறேன்’ என்று இவ்விடத்து ப்ரமாணத்திற்குப் பொருளாவது போல. ‘கடலையாவது கடக்கிறேன், அல்லது நானாவது முடிந்துபோகிறேன்’ என்றே அவ்விடத்திற்குப் பொருளாவது தான் பொருத்தமென்பதை மத்யஸ்த த்ருஷ்டிகள் உணர்வார்கள். ஊனெய் குரம்பை இத்யாதியின் கருத்தாவது-ஆழ்வீர்ளும்மை இவ்வுடம் போடே கொண்டுபோவதாக விளம்பித்தோம்; ஆனாலும் ளும்முடைய நிர்ப்பந்தத் தாலே இவ்வுண்டம்பை யொழியவே கொண்டுபோவதாக முடிந்தது; இனி ஆறியிருப்பேனோ வென்று சொல்லி, மாம்ஸாதிமாய் ஹேயமான இந்த சாரிரத்தினுள்ளே புகுந்து, தன்னைப் பிரிந்து தடுமாறுகைக் கடியான புண்ய பாபரூப கருமங்களைத் தானே தவிர்த்தருளினானென்கை.

English Translation

The Lord of Tirupper with nectared groves who grant us liberation is inside me today. He has entered this cage of flesh and is himself clearing the path of all obstacles

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்