விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எளிதாயினவாறுஎன்று*  என்கண்கள் களிப்பக்* 
    களிதாகிய சிந்தையனாய்க்*  களிக்கின்றேன்*
    கிளிதாவிய சோலைகள்சூழ்*  திருப்பேரான்* 
    தெளிதாகிய*  சேண்விசும்பு தருவானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கிளி தாவிய - கிளிகள் தாவம்படி செறிந்த
சோலைகள் சூழ் - சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான் - திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான்,
தெளிது ஆகிய - தெளிந்த நிலமான
சேண் விசும்பு - பரமாகாச மென்னும் திருநாட்டை

விளக்க உரை

“கிளி தாவிய சோலைகள் சூழ்திருப்பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவான்” என்ற பின்னடிகளை முன்னம் யோஜித்துக்கொள்வது. முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்கள் கிளியோடொக்கச் சொல்லப்படுவர்கள்; அத்தகைய ஸத்புருஷா;கள் வாழுமிடமான திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் இருள் தருமா ஞாலம்போலன்றியே எப்போதும் தெளிவையே பண்ணக்கடவதான திருநாட்டை எனக்குத் தருவதாகத் துணிந்திருந்தான்; துர்வலபமான விஷயம் நமக்கு இங்ஙனே எளிதானபடி என்னே! என்று, முன்பு விடாய்த்திருந்த எனது கண்கள் களித்தன; சிந்தையுங் களித்தது என்றாராயிற்று.

English Translation

My eyes rejoice to see Him so easily, With lightness heart I too rejoice, Tirupper is surrounded by groves with sweet parrots. The Lord there will give us his clear Vaikunta

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்