விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிடித்தேன் பிறவி கெடுத்தேன்*  பிணிசாரேன்* 
    மடித்தேன் மனைவாழ்க்கையுள்*  நிற்பதுஓர் மாயையை*
    கொடிக் கோபுரமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    அடிச்சேர்வது எனக்கு*  எளிதுஆயின வாறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறவி கெடுத்தேன் - (அது அடியாக) ஸம்ஸாரம் தொலையப் பெற்றேன்;
பிணி சாரேன் - பிணிகள் வந்து அணுகாவகை பெற்றேன்;
மனை வாழ்க்கையுள் - ஸம்ஸாரத்தில்
நிற்பது ஒர் மாயையை - நிற்கையாகிற அஜ்ஞானத்தை
மடித்தேன் - நிவ்ருத்தமாக்கிக் கொண்டேன்.

விளக்க உரை

எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார். பிடித்தேன்-எம்பெருமானை இனியொரு நாளும் பிரியாதபடி சிக்கெனப்பிடித்தேன். (பிறவி கெடுத்தேன்) திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் ஜந்துபோல இதுவரையில் எத்தனையோ யோன்கிளில் நுழைந்து புறப்பட்;ட யான “புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே பதநம்” என்னும்படியான நிலைஇனி நேராதபடி செய்துகொண்டேன். (பிணிசாரேன்) பிறவியைக் கெடுத்த பின்பு, பிறவியைத் தொற்றிவரும் பிணிகளையும கெடுத்தேனானேன். (மனைவாழ்க்கையுள் நிற்பதோர்மாயையை மடித்தேன்) அநாதிகாலந் தொடங்கி இன்றருளவுஞ் செல்லுகிற இந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும் நிவர்த்திப்பித்தேன். ஸம்ஸாரத்தில் நிற்கைக்கடியான மூலப்ரக்ருதியை உருவழித்தேனென்கை. இங்கே ஒரு ஐதிஹ்யமுள்ளது ஈட்டில்: “எம்பெருமானார் உலாவியருளுகிறவர் முடியப்பொகாதே நடுவே மீண்டருள, எம்பார் கதவையொரச்சாரி;த்து திருமாலிருஞ்சோலை யாகாதே திருவுள்ளத்திலோடுகிறது? என்ன; ஆம் அப்படியே யென்றரளிச்செய்தார் என்பதாக. இதைச் சிறது விவாரிப்போம்; புக்தவா சதபதம் கச்சேத் (போஜனம் செய்தவுடனே நுற்றடி நடந்து உலாவவேண்டும்) என்று சாஸ்த்ரமாகையாலே; இதையநுஸாரித்து எம்பெருமானார் பிiகூஷயானவுடனே மடத்திற்குள்ளே உலவாவாநின்று அப்போது திருமாலிருஞ்சோலை வாய்மொழியை அநுஸந்தானம் செய்து கொண்டிருக்கையாலே இப்பாட்டில் மடித்தேன் என்ற விதற்குச்சேர, மேலே போகாமல் திரும்பியருளினார். இதைக் கதவின் புரையாலே எம்பார் கண்டு அஹே பாதம் அஹிரேவ ஜாநாதி என்கிற ர்தியில் தத்துவாமறிந்து, இப்போது இன்ன திருவாய்மொழி யஎஸந்தானமன்றோ திருவுள்ளத்திலோடுகிறது! என்றாராம். ஆம் என்று விடை யிறுத்தராம் எம்பெருமானார். கொடிக் கோபுர மாடங்கள் சூழ்திருப்பேரானடிச் சேர்வது எனக்கு எலிதாயினவாறே!-கொடிகளணிந்த கோபுரங்களையும் மாடங்களையு முடைத்தான திருப்பேர் நகாரிலே நித்ய வாஸ்செய்தருளு மெம்பெருமானுடைய அடி சேருயைற்கிற விது எனக்கு எளிதாயினவாறு என்னே!. இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி -“அறுகம் புல்லையிட்டுக் கண்ணைப் புதைத்துக்கொள், சாணகச் சாற்றைக்குடி, தலையைக் கீழே நடு, காலை மேலேயெடு என்று அருந்தேவைகளை சாஸ்த்ரம் சொல்லாநிற்க, எனக்கு இங்ஙனே யிருப்பதொரு மூலையடிவழி உண்டாவதே.” என்று. திருப்பேரான் என்ற விடத்து ஈட்டில் “திருப்போரிலே நிற்கிறவன்” என்றருளிச் செய்திருப்பதைக் காண்பவர்கள் ‘திருப்போரிலே சயனத்திருக்கேரலமன்றொ? நின்ற திருக்கோலமாக அருளிச்செய்தபடி யெங்ஙனே? என்று சங்கிப்பர்கள். நிற்கிமுவன் என்றது ஸ்தாவர ப்ரதிஷ்டையாகக் கிடப்பவன் என்ற பொருளிலே பணித்ததாகை யாலே சங்கைக்கு இடமில்லை.

English Translation

I held him destroyed rebirth and overcame disease and diverted myself from the lure of household life. Tirupper is surrounded by pennoned masions rising fall. Attaining His feet is an easy task for me, just me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்