விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேரே உறைகின்ற பிரான்*  இன்று வந்து* 
    பேரேன்என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
    கார்ஏழ் கடல்ஏழ்*  மலைஏழ் உலகு உண்டும்* 
    ஆராவயிற்றானை*  அடங்கப் பிடித்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேரே உறைகின்ற பிரான் - திருப்பேர் நகாரில் நித்திய வாஸம் பண்ணு மெம்பெருமான்
இன்று வந்து பேரேன் என்று - இன்று தானே விரும்பி வந்து இனிப் பேரமாட்டேனென்று
என் நெஞ்சு நிறைய புகுந்தான் - என்னெஞ்சிலே தான் பாரிபூற்ணனாம்படி புகுந்தான்;
(ஆகவே)
ஏழ்காரி ஏழ்கடல் ஏழ் மலை உலகு உண்டும் - ஏழேழான மேகங்களும் கடல்களும் மலைகளுஞ் சூழ்ந்த உலகங்களை யெல்லாமமுது செய்தும்
ஆரா வயிற்றானை - நிறையாத திருவயிற்றையுடைய அப்பெருமானை

விளக்க உரை

இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார். காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டு மாராவயிற்றான் என்று பின்னடிகளிலுள்ளது இப்பாட்டுக்கு உயிரானது. புஷ்கலாவர்த்தகம் முதலான மேகங்களேழையும் கடல்களேழையும் குலபர்வதங்களேயுமுடைத்தான லோகத்தையெல்லாம் ரகூஷித்துங்கூட என் செய்தோமென்று குறைபட்டிருந்தானும் ஆவ்வார் திருவுள்ளத்தல் வாஸம் கிடைக்கப் பெறாமையினாலே; அக்குறை தீர்ந்தாயிற்று இப்போது இக்குறை தீருகைக்காகத் திருப்பேர் நகாரிலே வந்து ஸன்னதி பண்ணியிருந்து ஸ்வல்ப வியாரிஜமாத்திரமே கொண்டு ஆழ்வார் திருவுள்ளத்திலே புகுந்தான். தாமரைப்பூவைவிட்டுத் தன்னுடைய திருமார்பிலே வந்து சேர்ந்த பிராட்டி ‘அகலகில்லேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததுபோல, தானும் பேரேன், பேரேன், (அதாவது, ஆழ்வாருடைய இத்திருவுள்ளததை விட்டுப் பேர்ந்து செல்லமாட்டேன், அகன்று போகமாட்டேன்) என்று சொல்லிக்கொண்டே புகுந்தானாம். பிரானே! நீ இங்கேயிருக்கப் போகிறாய்? புறப்பட்டுப் போகிறாய? என்று கேட்பாரு மின்றிக்கே யிருக்கச்செய்தே தானே ஆணையிட்டுப் பேரேன் என்கிறானாயிற்று. (என்னெஞ்சு நிறையப் புகுந்தான்) ‘நிறைய என்பது நெஞ்சிலே அந்வயிப்பதன்று; புகுந்தவனிடத்தே அந்வயிப்பது. என்னெஞ்சு நிறையும்படி புகுந்தானென்று பொருளன்று; என்னெஞ்சிலே புகுந்தான்; (எப்படி புகுந்தானென்னில்;) நிறைய -இதனால் தான் பூர்ணனாம்படி புகுந்தான என்கை.

English Translation

The Lord residing in Tirupper has come to me today, entered my heart and filled it, never to leave. He who devoured the seven worlds, clouds, hills and seas is contained inside me, tightly held

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்