விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
    திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
    குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
    திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் சென்று சர்வு இடம் - இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று வாழுமிடம் (எது வென்றால்)
குரு மாமணி உந்து புனல் - மிகச்சிறந்த மாணிக்கங்களைக் கொழிக்கின்ற
பொன்னி - காவிர் யாற்றினுடைய
தென்பால் - தென்பக்கத்திலுள்ளதான்
தென் திருப்பர் - அழகிய திருப்பர்  நகராம்.

விளக்க உரை

எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார். தீருமாலிஞ் சோலைமலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறைப்புகந்தான் - என்னுற்ரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்று மடிமாங்காயிட்டு விஷயீகாரிக்குமவனான எம்பெருமாளுக்கு என் பக்கலிலே ஒரு பற்றாசு கிடைத்தது; அது ஏனென்னில், என்வாயில் திருமாலிருஞ்சோலைமலை யென்று ஒரு சொல் யாத்ருச்சிகமாக வெளிவந்தது; மற்ற மலைகளிற் காட்டிலும் திருமாலிருஞ்சோலைமலைக்கு ஒரு வைலகூஷண்யமுண்டென்று கொண்டு புத்தி பூர்வகமாகச் சொன்னனல்லேன்; பலமலைகளையும் சொல்லிப்போருகிற வாரிசையிலே திருமாலிருஞ்சோரைiலையென்று இதனையும் சொன்னேனத்தனை; இவ்வளவே கொண்டு அவன் பிராட்டியோடுங் கூடவந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தோனாயிற்ற. விபீஷ்ணாழ்வான் பக்கலிலே மித்ரபாவமே அமையுமென்றவனன்றோ இப்பெருமான். அஹ்ருதயமாகச் சொன்னதையும் ஸஹ்ருதயமாக்கிக் கொடுக்க வல்லவளான பிராட்டி அருகே யிருக்கையாலே மலையைப்பற்றின என்வாக்கு அவருக்கு மலையாகவே ஆய்விட்டதென்கிறார். எம்பெருமாளுக்கு நீற்வண்ணனென்றொரு திருநாமமுண்டு; நீர்ன் தன்மைபோன்ற தன்மையையுடையவன் எம்பெருமான்; மிகச் சிறிய த்வாரமொன்று கிடைத்தாலும் நீர் உள்ளே புகுந்து நிறைந்து விடுமே; அப்படியே நீர்வண்ணான எம்பெருமானும் உள்ளே புகுவதற்கு ஸ்வல்பத்வாரம் பெற்றால் போதுமே; திருமாலிருஞ்சோலைமலை யென்ற ளுக்திமாத்ரமே ஸ்வல்பத்வாரமாயிற்றென்க. இப்படி தம் நெஞ்சு நிறையப்புகுந்த பெருமான் எவ்விடத்திலுள்ளானென்ன அவ்விடம் சொல்லுகிறது பன்னடிகளால். குருமாமணியுந்து புனல் பொன்னித் தென்பால் தென் திருப்பேர் -சிறந்த ரத்னங்களைக்கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள புனலை யுடைத்தாகையாலே பொன்னி யென்றும் கநகநதி யென்றும் பேர்பெற்றிருந்திருக்கிற திருக்காவோரியின் தென்கரையிலள்ற்ன திருப்பேர் நகர்-அப்பக்குடத்தான் ஸன்னிதி திருமால் சென்று சேர்விடம் -பரமரஸிகனானவன் தானும் பிராட்டியுமாய் விரும்பிச்சென்று சேரும் தேசம் அதுவாயிருக்கச் செய்தே கிடீர் என்னுடைய அஹ்ருதயமான ளுக்திமாத்ரத்தைக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இதென்ன நிர்ஹதுகவிஷயீகாரம்! என்று உள்குழைத்து பேசுகிறபடி. மூன்றாமடியி;ல் குரு என்றது வடசொல் விகாரம்; சிறந்த வென்றபடி. ஒளினிக்கு விலையுயர்ந்தமணிகளை யென்றவாறு.

English Translation

Even as I uttered Tirumalirumsolai, the Lord entered my heart and filled it, On the Southern banks of the Kaveri washing precious gems, the Lord and spouse of Sri resides in Ten-Tirupper

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்