விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாடும் நகரும் அறிய*  மானிடப் பேர்இட்டு* 
    கூடிஅழுங்கிக்*  குழியில் வீழ்ந்து வழுக்காதே*
    சாடிறப் பாய்ந்த தலைவா!*  தாமோதரா! என்று- 
    நாடுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாடும் - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்யஜ்ஞானிகளும்
அறிய - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
மானிடர் பேர் இட்டு - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி - அவர்களோடு கூடி
அழுங்கி - ஒளி மழுங்கி

விளக்க உரை

“நாடு நகருமறிய” என்கிறவிது ஈற்றடியில், ‘நாடுமின்” என்ற வினைமுற்றோடு இயையும். அழுங்கி- ஆத்துமாவுக்கு இயற்கையாயுள்ள ஸ்வரூபப்ரகாசம் மழுங்கி என்றபடி,

English Translation

Letting the town and country know, you give a local man’s name to your child, and fall into the same pit that he is in. Call “O Lord-who-smote-the-cart!”, “O Damodara!” and exult. Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்