விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
    தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*
    தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
    மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வன்கையர்; ஐவர்  மங்க - கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும்
தான் ஆங்காரம் - தானே அபிமானியாய்ப் புகுந்து
தானே தானே ஆனானே - ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை,
தேன் ஆங்காரம் பொழில் - வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த
குருகூர் - திருநகாரிக்குத் தலைவரான

விளக்க உரை

பாட்டுத் தோறும் திருமாலிஞ் சோலையென வருவதுகொண்டே தெரிந்து கொள்ளக்கூடிய தன்றோ; “இவை பத்தும திருமாலிருஞ் சோலைமலைக்கே” என்று விசேஷித்துச் சொல்லுவதன் கருத்து யாதென்னில்; கேண்மின்; கீழே (2-10.) கிளரொளியிளமைப் பதிகத்தில் “மயல்மிகு பொழில் சூழ்மாலிருஞ்சோலைக் என்கிறார்; அஜ்ஞானத்தை மிகுவிக்கும் தேசம் என்பது கருத்து; ஸம்சயமும் அஜ்ஞானத்தில் ஒரு வகுப்பாகையாலே, மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார் தமக்கும் அஜ்ஞானமுண்டாகி “முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற தாமரை யாயலர்ந்துவோ?” என்று ஸம்சயிக்க நோந்தது; இவ்வளவே யன்றிக்கே ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுங்கூட தம்முடைய ஹேயமான தேஹத்திலே ஆதரம் பண்ணும்படி நேர்ந்ததானது மயல்மிகு பொழில் சூழ்மாலிரஞ் சோலையில் வாஸத்தின் பலனே யென்று காட்டுகை ஒரு கருத்து; அப்படி அவன் தம்முடைய தேஹத்திலே பண்ணின ஆதரத்தைத் தவிர்த்துக்கொண்டதும் திருமாலிருஞ் சோலை வாஸத்தினால்தான்; அடியார்களுக்கு விதேயனாகைக்காகவே அர்ச்சாவதார பாரிக்ரஹமாகையாலே இதை ஆழ்வார் உணர்த்தவே ஆழ்வாருடைய கட்டளையை மீறலாகாதென்று கொண்டு தவிர்ந்தானாயிற்று; இதுவும் திருமாலிரஞ் சோலை வாஸத்தின் பலனே யென்று காட்டுகை மற்றொரு கருத்து. இப்பாட்டின் முன்னடிகளில் சொல்லப்பட்டிருக்கிற விஷயமே இப்பதிகத்திற்குப் பலன் என்று கொள்ளக்கடவது. மான் ஆங்காரம் மனம் கெட-மஹான் அஹங்காரம் மநஸ்ஸென்று மூன்றைச் சொன்னது ப்ரகிருதிக்கும் உபலகூஷணம். சாரிரஸம்பந்தம் நசிக்கும்படியாக என்றபடி, ஐவர் வன்கையர் மங்க-வன்கையரான ஐவர் மங்க; பெருமிடுக்குடைய பஞ்சேந்திரியங்களும் மங்கும்படியாகவும் என்றபடி. கீழ்ப்பாட்டில் ஐந்தைந்தாகச் சொன்னவை யெல்லாவற்றுக்கும் உபலகூஷணமிது. ப்ரக்ருதி ப்ராக்ருதாத் மகமான தம்முடைய திருமேனியிலே நசைகெட்;டு என்றதாயி;ற்று. தான் ஆங்கார மாய்ப்புக்கு-என்னை யநுபவிக்கப் பெரிய செருக்கோடே வந்து புகுந்து என்றபடி. தானே தானே யானானே - நான் இரக்க வேண்டாதே தானே இரப்பாளனாகி யென்றவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வராருளிச்செய்த ஆயிரத்துள்; மானாங்காரத்து இவை பத்தும் - இதற்கு இரண்டுபடியாகப் பொருளளிருளிச் செய்வர்; -மஹான் அஹங்காரம் முதலியவற்றின் கூட்டரவான தேஹத்தை விட்டுத் தொலைப்பதற்காகச் சொன்ன இப்பதிகம் -என்றும், பெரிய செருக்கோடே சொன்ன இப்பதிகம் என்றும். ஆழ்வார் தம்முடைய உத்தேச்யம் தலைக்கட்டுகை அணித்து என்னுமத்தாலே பெரிய செருக்கு உண்டாகக் குறையில்லையே.

English Translation

This delightful decad of the thousand songs by Satakopan of honey-dripping Kurugur groves on the destruction of Mahat, Ahankara, Manas and the five senses, addresses the Malirumsolai Lord who entered me, and himself became me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்