விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்*  ஒருவன் உலகுஎல்லாம்* 
    ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து*  காத்து கெடுத்துஉழலும்*
    ஆழி வண்ணன் என்அம்மான்*  அம்தண் திருமாலிருஞ்சோலை* 
    வாழி மனமே! கைவிடேல்*  உடலும் உயிரும் மங்கஒட்டே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகு எல்லாம் - ஸகல லோகங்களையும்
ஊழி தோறும் - படைக்கவேண்டிய காலந்தோறும்
தன் உள்ளே - தன் ஸங்கல்பத்தின் ஏக தேசத்துக்குள்ளே
படைத்து காத்து கெடுத்து உழலும் - ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்து போரு மவனாய்
ஆழி வண்ணன் என் அம்மான - கன்பீரஸ்வபாவனாயிருக்கின்ற எம்பெருமானுடைய

விளக்க உரை

ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது. பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது. ஆறாயிரப்படி யருளிச்செயல்-‘நமக்க இந்த ஸம்ருத்தியெல்லாம் திருமலையாலே வந்து ஸம்ரத்திகிடாய், நெஞ்சே! இனித் திருமலையைக் கைவிடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச் சொல்ல; இ;;வாத்மாவினுடைய நிகர்ஷம் பாராதே இத்தோடே கலந்தருளினாயேயாகிலும் என்னுடையஹேயனான இந்த ப்ரக்ருகியில் அபிநிவேசத்தை விட்டருளவேணுமென்று எம்பெருமானை ப்ரார்த்திக்கிறார்.” என்று. ஈற்றடியில் மனமே! என்று விளியிருப்பது போல எம்பெருமானே! என்று மற்றொரு விளியில்லாமையால் பாட்டு முழுதும் நெஞ்சை நோக்கியே சொல்லுவதாகக் கொள்ளலாமென்று கருதினர் பன்னீராயிரவுரைகாரர். நெஞ்சே! நமக் த்யாஜ்யமான தேஹப்ராணாதிகள் மங்கும்படியாகச் செறிந்து ஆச்ரயிக்கப்பாராய்; நம் காரியம் செய்து முடிக்குந்தனையும் திருமாலிருஞ்சோலை மலையைக் கைவிடாதே கொள்; இ;த்தாலே நீ வாழிவாய்-என்று ஏகவாக்யமாவே உரைத்திட்டார். இது சுவையுடைத்தன்று ஆழ்வார் தம் திருவுள்ளததை நோக்கி “வாழி மனமே கைவிடல்” என்று அருளிச் செய்தவுடனே எம்பெருமானும் தன் திருவுள்ளத்தைக் குறித்து ‘ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாகையாலே நீயும் அத்திருமேனியை ஒருகாலும் விடாதே கிடாய்” என்று கூறினானாக. அது கேட்ட ஆழ்வார், பிரானே! இது யுக்தமன்று இதைத் தவிரவேணும் என்று கால்கட்டுகிறார். உடலு முயிரும் மங்க வொட்டு - சாரிரமும் பிராணனும் மங்கும்படி இசையவேணும். (வெறுப்புக்கு இலக்காக வேணுமேயல்லது - என்று ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுக்கும் உணர்த்தினாராயிற்று. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“மங்கவொட்டென்கையாலே இதுக்கு முன்புத்தை ஆழ்வாருடைய இருப்பு ப்ராப்த சேஷத்தால்ல; பகவதபிப்ராயத் தாலே யென்னுமிடம் தோற்றுகிறது ஈச்வரன் பற்றி விடேனென்றிருக்கையாலே இருந்தாரென்கிறது” என்று.

English Translation

The Ocean-hued Lord of Malirumsolai is our master, - the Supreme Cosmic Lord through age after age, who creates, protects and destroys all in himself. Well done, O Heart! Hold on to him, and let this body and life die

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்