விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
    திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*
    அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
    ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே - ஸ்ரீவைகுண்டத்தோடும் திருமலையோடு மொக்க என்னுடலையும்,
அருமா மாயத்து எனது உயிரே - கடக்கவாரிதான ப்ரக்ருதியோடே கலசியிருக்கிற என்னாத்மாவையும்
மனமே வாக்கே கருமமே - மனஸ்ஸையும் வாக்கையும் க்ர்யையும்,
என் ஊழி முதல்வன் ஒருவன் - ஸகலகாரண பூதனான ஸர்வேச்வரன் ஒருவன்
ஒரு மா நொடியும் பிரியான் - ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமும் பிரிகிறலன்.

விளக்க உரை

திருமாலிருஞ் சோலைமலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடமலை முதலாகத் தானெழுந்துருளியிருக்கும் திவ்விய தேசங்களெல்லவறாறலும் தனக்குப் பிறக்கும் ப்ரீதியை என்னுடைய அவயங்களிலே ஸம்ச்லேஷத்தாலே பெற்றவனாய் ஒரு கூஷணமும் என்னைவிட்டுப் பிரிந்து தாரிக்கமாடடாதவனாயிரா நின்றான்; இவனுடைய அபிநிவேசமிருக்கும்படி என்னே! யென்று வியக்கிறாற்ப்பாட்டில். இதில் முதலடியில்-திருமாலிருஞ்சோலைமலையையும் திருப்பாற்கடலை சொல்லப்படுகிறது. இரண்டாமடியில்-ஸ்ரீ வைகுண்டத்தையும வடக்குத் திருமலையையும் ஆழ்வாருடைய திருமேனியையும் ஏகாரிதியாக விரும்புகிறபடி சொல்லப்படுகிறது. ஆக, இரண்டு திருமலைகளிலும் பரவ்யூஹங்களிலும பண்ணும் விருப்பத்தையெல்லாம் தம் திருமேனி யொன்றிலே பண்ணாநின்றான் என்றாராயிற்று. மூன்றாமடியில்; வேறோர்டம் சலசாதே தம்முடைய ஆத்மவஸ்துவிலும் மநோவாக்காயங்களிலும் ஏகாரிதியாக விருப்பம் செய்திருக்கிறபடியைப் பேசுகிறார். இப்பாட்டில் ளும்மைகள் பியோக்கிக்வேண்டு மிடங்களில் ஏகாரம் பிரயோகிக்கப் பட்டிருப்பது குறிக்கொள்ளப் படவேண்டும். திருமாலிருஞ்சோலைமலையும் திருப்பாற்கடலும என்தலையும்என்றாப் போலேயென்றோ சொல்ல வேண்டும்; ளும்மையை விட்டு ஏகாரமிட்டதன் கருத்தை நம்பிள்ளை விளக்கியருளுகிறார்-“ஸெளாரியைப் போலே அனேகம் வடிவுகொண்டு நில்லா நன்றானாய்த்து” என்று. ஸௌபாரி யென்பவன் மாந்தாதாவின் ஐன்பது பெண்களை மணம் புணர்ந்து தனித்தனி ஐம்பது வடிவுகளெடுத்து அத்தேவியமாருடனே தனித்தனியே ‘என் கணவன் என்னொருத்தியை விட்டு வேறொருததிபால ஒரு நொடிப் பொழுதும் செல்கின்றிலன்’ என்றே நினைத்திருந்தாளாம். அப்படியே எம்பெருமானும் இப்பாட்டிற் சொல்லப்படுகிற இடங்களில ஒன்றிலிருக்கும்போது மற்றென்றில் இல்லை யென்று நினைக்கலாம்படி யிருந்தமை தோற்றவே ளும்மையை தவிர்த்து ஏகாரம் பிரயோகிக்கப் பட்டதென்று கொள்க. ஒருமா நொடியும் பிரியான் - ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமுங் பிரிகின்றலனென்ற படி. ஒன்றைவிட்டு மற்றென்றில் கால்வாங்கிப் போகாமல் அஸ்தமிதாந்பாவனானயிருந்து அநுபவிக்கினறானென்கை இப்படி யநுபவிப்பவன் யாவனென்ன; (என்னுழி முதல்வ னொருவனே.) காரியவாஸ்தையிலும் காரணாவஸ்தையிமுள்ள சேதநா சேதநங்கனுடைய ஸத்தை தன் அதீன மாம்படி யிருக்குமவன் தன்எடை ஸத்தை என் அதீனமாம்படி என்பது கருத்து.

English Translation

O Malirumsolai hill, O Milk Ocean, My heart! O Tirumal, Vaikunta, Cool Venkotam hill, My body O Great wonders, My life, thought, word and deed! O My first-cause Lord, who never leaves me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்