விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருளை ஈ என்அம்மானே! என்னும்*  முக்கண் அம்மானும்* 
    தெருள்கொள் பிரமன்அம்மானும்*  தேவர் கோனும் தேவரும்*
    இருள்கள் கடியும் முனிவரும்*  ஏத்தும் அம்மான் திருமலை* 
    மருள்கள் கடியும் மணிமலை*  திருமாலிருஞ்சோலை மலையே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏத்தும் - துதிக்கும் படியான
அம்மான் - எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமி;டமான
திருமலை - திருமலை எதுவென்றால்;
மருள் கள் கடியும் மணிமலை - மருள்களை யெல்லாம் தவிக்கும் அழகியமலையான
திருமாலிருஞ் சோலைமலையே - தெற்குத் திருலையேயாகும்.

விளக்க உரை

இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார். திருமால்ருஞ்சோலைமலை எப்படிப்பட்ட தென்னில்; மருள்கள் கடியும் மணிமலைப்ராப்தி விரோதிகளான அவித்யை முதலிய ஸகல அஜ்ஞானங்களையும் அனைவர்க்கும் போக்க்கடவதாய் விலகூஷணமான திருமலை. பின்னையும் எப்படிப்பட்ட தென்னில்; தேவரும் முனிவருமேத்துமம்மான திருமலை-தேவர்களும் மஹாரிஷிகளும் ஏத்த நின்ற ஸர்வேச்வரன் தான விருன்பி வந்து லே;விழுந்து படுகாடு கிடக்கம தேசம். அந்த தேவர்கள் யாவரென்னில்; ப்ராப்தனான் நீயெ அருள்செய்தாக வேண்டும்? என்ற சைகூப்பிப் பல்வாசைகளைக் காட்டிப் பிரார்திதிக்கின்ற ஈச்வராபி மாநியான ருத்ரனும்; அவருக்குங்கூட ஞானமளிப்பவனாய்த் தந்தைகயான பிரமஎம், தேவஜாதிக்கெல்லாம தலைவனென்று இறுமாந்திருக்கின்ற தேவேந்திரனுமாவர். இத்தேவர்களோடு கூட, அஜ்ஞானவிருளை வேரறப்போக்கியிருக்கும் ஸமர்தாக்களான மஹாரிஷிகளுமாக இப்பெரியார்களெல்லாரும் ஒருமிடறு செய்து ஏத்தநின்ற ஸர்வேச்வரன் வர்த்திக்கும் திருமலை திருமாலிருஞ்சோலைமலையென்று துதித்தாராயிற்று.

English Translation

The Lord in Malirumsolai, the mountain-gem who sings love songs, is worshipped even by Siva, Brahma, Indra and the gods. Seers of great enlightenment praise the holy mountain

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்