விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருமாலிருஞ்சோலை யானேயாகி*  செழு மூவுலகும்*  தன்- 
    ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து*  ஊழி ஊழி தலையளிக்கும்*
    திருமால்என்னை ஆளும்மால்*  சிவனும் பிரமனும்காணாது* 
    அருமால் எய்தி அடிபரவ*  அருளை ஈந்த அம்மானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அருளை ஈந்த அம்மான் - அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய்,
செழு மூ உலகும் - விலகூஷணமான மூவுலங்களையும்
தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து - ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து
ஊழி ஊழி தலை அளிக்கும் - கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான
திருமால் - திருமகள் கொழுநன்

விளக்க உரை

திருமாலிருஞ: சோலைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார். “திருமால் திருமாலிருஞ் சோலையானேயாகி என்னையாஉமால்” கொண்டு நிற்கிறவன்-என்னை யடிமைகொள்கைக்காக என் பக்கல் பியாமோஹம் வயிற்றினுள்ளே வைத்து ஊழியழி தலையளிக்குந் திருமால்-மூவுலங்களையும் தன் சிறிய திருவயிற்றினுள்ளே வைத்துச் சிறந்த ரகூஷணம் செய்தருளுமவன்; இப்படிப்பட்டவன் என்னையாளும் மால்- ப்ரளயாபத்தில் ஜகத்துக்கு தன்னை யொழியச் செல்லாயிருக்குமவன். சிவனும் பிரமஎம் காணாது அருமாலெய்தி அடி பரவ அருளை யிந்தவம்மான் -சிவன் பரமன் முதலானார் காணப்பபெறாதவர்களாய்க் காணவேணுமென்று ஆசை கொண்டு பக்தியுக்தர்களாய்த திருவடிகளை ஸ்தோத்ரம்பண்ண அவர்களுக்கு முகம் தோற்றமே கடக்க நன்று அருள்செய்யும் ஸர்வேச்வரன், என்னை யாளும்மால் எனக்குக் கண்ணுக்கிலக்காம்;படி திருமலையிலே வந்து நின்று என்று என்னை அடிமை கொள்கையிலே பெரும்பித்தனானான். ஆக இப்பாட்டு மூன்று வாக்கியார்த்தமாக அந்வயித்ததாயிற்று. (1) திருமாலிருஞ்சோலையானேயாகி என்னையாளும்மால் (2) செழுமூவுலகும் தன்னொருமாவயிற்றினுள்ளேவைத்து ஊழியூதிதலையளிக்குந் திருமால் என்னையாளம்மால் (3) சிவனும் பிரனுங்காணாது அருமாலெய்தியடி பரவ அருளையீந்;தவம்மான் என்னையாளும்மால்.

English Translation

The Lord of Malirumsolai devours all the worlds. My loving master also then protects them through the ages. The Lord of Sri. invisible even to Siva and Brahma, lovingly gave his graceful feet to me for worship

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்