விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நண்ணா அசுரர் நலிவுஎய்த*  நல்ல அமரர் பொலிவுஎய்த* 
    எண்ணாதனகள் எண்ணும்*  நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
    பண்ணார் பாடலின் கவிகள்*  யானாய்த் தன்னைத் தான்பாடி* 
    தென்னா என்னும் என்அம்மான்*  திருமாலிருஞ்சோலையானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண்ணாதனகள் எண்ணும் நல்முனிவர் இன்பம்  தலைசிறப்ப - எம்பெருமாளுக்கு இன்னமும் சில குண விபூதிகள் உண்டாகவேணுமென்று என்ணுமவர்களான முனிவர்கள் கேட்டு மிகவுமுகக்கும்படியாகவும்
பண் ஆர் பாடல் இன் கவிகள் - பண்ணிறைந்த பாடல்களான இனியகவிகளையிட்டு
யானாகி;த்தன்னைத் தானே பாடி - தானே யானாகி;த்தன்னைத் தானே பாடி
தென்னா என்னும் என் அம்மான் - தென்னா தெனாவென்று ஆளத்திவைத்து ரஸியாநிற்கு மெம்பெருமான் (எங்குள்ளா னென்னில)
திருமாலிருஞ் சோலையான் - திருமாலிருஞ்சோலை மலையிலுள்ளான்.

விளக்க உரை

“நண்ணாவசுரர்நலிவெய்த” என்றவிடத்து ஈட்டில் அருளிச்செய்வது பாரீர்- “அவ்யபதேச்யனுக்கு அனந்தரத்திலவன், தமப்பன் செய்ததைக்கேட்டு இவனென் செய்தானானான்! என்று கர்ஹித்தான்; ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தர்சநம் குலைந்ததோ? என்று கர்ஹித்தான்; ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தர்சநம குலைந்ததோ? திருவாய்மொழி யென்னும் ஸ்ரீராமாயணமென்றும் வலிநன இரண்டு ப்ரந்தங்களுண்டாயிருக்கக்-என்றானாயிற்று. இப்படி உகவாதார் நெஞ்சுளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து -என்று. இதனைச் சிறிது விவாரிப்போம். இங்கு அவ்யபதேச்யனென்றது க்ர்மிகண்ட சோழனை. அவருடைய பெயரை வாயாலே யெடுத்துரைக்கக் கூசி அவ்யபதேச்யனென்றது. அவருக்கு அனந்தரத்திலவன் -அவருடைய மகன். அவன் தகப்பன் ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திற்கு விரோத மாகச் செய்த அதர்க்கணச் செயல்களகை; கேள்விப்பட்டானாம்; பெருமாள் கோவிலே இடித்துப்போட்டானென்று கேள்விப்பட்டு ஐயோ! ஒரு கோவிலை இடித்துப்பபோட்டகனால் என்னாகும்! இதனால் தர்சனம் குலைந்ததாமோ? திருவாய்மொழியும் ஸ்ரீராமாயணமுமாகிய இரண்டு பிரபந்தங்களன்றோ ஸ்ரீ வைஷ்வணவ தாரிசனத்திற்குக் கல்மதில்களாயிருப்பவை; அவற்றை யசைக்க முடியுமோ ஒருவர்க்கு? என்றானாம் கிர்மிகண்ட சோழனது மகன். இதனால், திருவாய்மொழியானது ஆஸூரப்ரக்ருதிகள் மண்ணுண்ணும்படியாகவும் தேவப்ரக்ருதிகள வாழ்ந்து போம்படியாகவும் அவதாரித்தது என்னுமிடம் ஒரு சிறுவன் வாயினாலும் வெளிவந்ததென்று காட்டினபடி. எண்ணாதனக ளெண்ணும் நன்முனிவாரின்பம் தலைசிறப்ப-எண்ண முடியாத வற்றை யெண்ணுகின்றவர்களான ந் முனிவர்கள் மஹானந்தம் பெறுமதபடியாகத் திருவாய்மொழி அவதாரித்ததாம். எண்ணாதவற்றை யெண்ணகைவாயது என்னென்னில்; திருவாய்மொழி அவதாரிப்பதிற்கு முன்பு பல மஹானகள சபைகூட்டி ‘எம்பெருமானுடைய ஸ்வரூபகுண விக்ரஹ விபூதிகளை யெல்லாம பாரிபூப்த்தியாகப் பேசவல்ல பிரபந்தம் ஒன்றுகூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தமொன்று அவதாரிக்க வேணுமென்று மாமெல்லருங்கூடி எம்பெருமானை வேண்டிக்கொள்ள வேணும்’ என்று பேசி யெழுந்துபோனார்கள். அவர்களே திருவாய்மொழி அவதாரித்த பின்பு மறுபடியும் ஒரு மஹாஸபை கூட்டி ‘எம்பெருமாளுக்கு இன்னமும் குணவிக்ரஹ விபூதிகள் உண்டாகவேணும்’ என்றார்களாம். உள்ள குணவிக்ரஹ விபூதிகள் யெல்லாம திருவாய்மொழியிற் பேசிமுடித்து விட்டாராழிவார்- என்பது இதன் கருத்து. இது தான் எண்ணாதனகளெண்ணுகையாம. இன்பந்தலைச்சிறப்ப என்றவிடத்து ஈட்டில் -திருவாய் மொழியவதாரித்தபின்பு ‘அவருக்கு குணவிபூதிகள போராது’ என்றிருந்த விழவுதீற்ந்து அத்;தால் நிரதிசயாநந்திக்ளாக.” என்று ஸ்ரீஸூக்தி அச்சிடப்பட்டுள்ளது. எம்பெருமாளுக்கு குணவிபூதிகள் போராது என்றிருந்த இழவு திருவாய்மொழி யவதாரித்தபின்பு தீர்ந்தாகச் சொல்லுவது பொருந்துகிறநதா? என்று பார்க்கவேணும். திருவாய்மொழி அவதாரிப்பதற்கு மிலர்; எம்பெருமாளுக்குள்ள குணவிபூதிகளுக்குத் தக்க பிரபந்தமொன்று அவதாரிக்கவிலலையே! என்றுதான் இழவுப்டிருந்தார்கள் யாருமிலர். எம்பெருமாளுக்குள்ள கணவிபூதிகளுக்குத் தக்க பிரபந்தமொன்று அவதாரிக்கவில்லையே! என்று தான் இழவுப்படடிருந்தார்கள். திருவாய்மொழி அவதாரித்தபின்பு அந்த இழவு தீற்ந்து, எம்பெருமானு;ககு குணவிக்ரஹ விபூதிகள் போராது என்று இழவுற்றாராயினர். இதுவே நம்பிள்ளை தீருவுள்ளம். இத்திருவள்ளத்தைக் காட்டியே மேலே குறித்த ஸ்ரீஸூக்தியை யருளிச்செய்தார். அதை வைத்தர்கள். ஸ்ரீ ஸூக்தியில பிழையில்லை. அதை ஸேவிக்கவெண்டிய ர்தி எங்ஙனே யென்னில்; “திருவாய்மொழி யவதாரித்த பின்பு அவருக்கு கணவிபூதிகள் போராது என்று, அருநடதா விழவு தீற்ந்து அத்தால் நி;ரதிசயானந்திகாளாக” என்று ஸேவிக்கவேணும். திருவாய்மொழி யவதாரித்தபின்பு எம்பெருமாளுக்கு குணவிபூதிகள் போதாதென்று நினைத்து, முன்னிருந்த இழவுதீரப் பெற்றகென்பதாகக் கொள்க.

English Translation

The warning Asuras are dead, the good celestials have flourished. The seers who contemplate the unknown are rejoicing. My Lord who sang his own praise in Pann-based songs through me stands in Malirumsolai, singing the auspicious Tenaka

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்