விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்கொல் அம்மான் திருஅருள்கள்?*  உலகும் உயிரும் தானேயாய்*
    நன்கு என் உடலம் கைவிடான்*  ஞாலத்தூடே நடந்து உழக்கி*
    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற*  திருமாலிருஞ்சோலை* 
    நங்கள் குன்றம் கைவிடான்*  நண்ணா அசுரர் நலியவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஞாலத்தூடே நடந்து உழக்கி - பூமியெங்கும் நடையாயடியுலாவி
தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை - தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற
நாங்கள் குன்றம் கைவிடான் - நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்;
என் உடலம் நன்கு கைவிடான் - என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்;
அம்மான் திரு அருள் என்கொல் - எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே!

விளக்க உரை

என்கொலம்மாள் திருவருள்கள்! -மிகப் பெரியார்களுக்கு ஏதேனும் அந்யதாஜ்ஞாந விபாரிதஜ்ஞான முண்டானால் சிறியர்கள் அவர்களை நோக்கி ‘தேவாரிர் இப்படி ப்ரமிக்கலாமா? என்று கேட்கலாகாது; அவ்விதமாகவே இங்கு என்ன க்ருபை!’ என்று உபசார வழக்காவே சொல்லவேணும்; அவ்விதமாகவே இங்கு ‘என்கொலம்மான் திருவருள்கள்.’ என்கிறது. இப்படியும் அஸ்தாநே ப்ரமிக்கலாமோ? என்பது இங்குக் கருத்தாகும். எம்பெருமான் அவாப்த ஸம்ஸ்தகாமனா யிருந்துவைத்து ஒன்றும் பெறாதாரைப்போலே இப்படி கிடந்து படுகிறனே! இது என்ன மருள்!ஒன்றும் என்று சொல்லவேண்டுமிடத்து என்கொலம்மான் திருவருள்களென்கிறாராயிற்று. ஸர்வேச்வரனுக்கு நிரதிஷ்டநப்ரமமுண்டாமாகாதே” என்பது ஈட்டு ஸ்ரீஸக்தி. உலகில் ஒருவன் கயிற்றைப் பார்த்து ஸரிப்பமென்று ப்ரமிக்கிறான்; முத்;துச் சிப்பியைப் பார்த்து வெள்ளியென்று ப்ரமிக்கிறான்; ஏதோவொரு ஆலம் பனனிருந்து ப்ரமமுண்டாகிறதேயன்றி ஒரு ஆலமபனமு மின்றிககேப்தமமுண்டாகும் போலும் என்கிறாராம் ஆழ்வார். “நன்கென்எடரலும் கைவிடான” என்பதை நோக்கி இது அருளிச்செய்தபடி. பெருக்கனாயிருக்கும் ராஜபுத்திரன் ஒரு நீசமான என்னுடம்பிலே வியாமோஹம் பண்ணித் திரிகிறனே! இது என்ன ப்ரமம்! என்றவாறு. ஞாலத்தூடே நடந்துழக்கி - பூமியெங்கும் உலாவித் திரிந்து என்பது சப்தார்த்தம். திரிவிக்கிரமனாகி உலகளக்கிறதென்னும் வியாஜத்தாலே எங்கும் வியாபித்து ஆழ்வாரை யநுபவிக்கைக்கு ஏகாந்த ஸ்தலமேதோவென்று ஆராய்ந்து தெற்குத் திருமலை வாய்ப்பான இடமாகக் கண்டபடியாலே அங்கே நின்றருளினானாயிற்று. (நங்கள் குன்றம் கவிடான்-நன்கென்எடலம் கைவிடான்) “அங்குத்தைக் வாஸம் ஸாதனம், இங்குத்தை வாஸம்ஸாத்யம்” எ;று ஸ்ரீவசனபூக்ஷணத்திற் பணித்தபடியே திருமலையில் வாஸத்தை உபாயமாகக் கொண்டும் ஆழ்வார் திருமேனியிலுறைகையை உபேயமாகக்கொண்டுமிரா நின்றான். (நண்ணாவசுரா நலியவே) இப்படி யிருக்கிற விருப்பிலே விரோதிவர்க்கும் தன்னடையே தொலைந்தாயதயிற்று. இதன் கருத்து யாதெனில், எம்பெருமாளுக்கு திவ்யமங்கள் விக்ரஹமில்லை, திருக்கல்யாணகுணமில்லை யென்றிப்படி பிதற்றும் ஆஸூரவர்க்கலெம்மாம் திருமாலிருஞ் சோலைமலையில் எம்பெருமான் நின்ற நிலைகண்டவாறே தொரைந்ததாமே; அப்படியே, அப்பெருமான் ஆழ்வார் திருமேனியிற் பண்ணும் வியாமோஹம் இப்படிப்பட்டதென்றறிந்தாவறே ஆழ்வார்டத்தில் குறைகளை யெண்ணுகிற ஆஸூரவர்களெல்லாம் தொரைந்தாதாமே என்றவாறு.

English Translation

Becoming the worlds and all the souls if, he mingles into my body inseparably. He surveyed the Earth and chose Malirumsolai. He shall not forsake us, our enemies shall die

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்