விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னை முற்றும் உயிர்உண்டு*  என் மாயஆக்கை இதனுள்புக்கு* 
    என்னை முற்றும் தானேஆய்*  நின்ற மாய அம்மான் சேர்*
    தென்நன் திருமாலிருஞ்சோலைத்*  திசைகை கூப்பிச் சேர்ந்தயான்* 
    இன்னும் போவேனே கொலோ!*  என்கொல் அம்மான் திருஅருளே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திசை - திக்கை நோக்கி
என் மாயம் - ஆக்கை இதனுள் புக்கு     என்னுடைய ப்ராக்ருத சாரிரத்தினுள்ளும் புகுந்து
கைகூப்பி சேர்ந்த யான் - அஞ்சலி பண்ணி அடிமைப் பட்ட நான்
என்னை முற்றும் தானே ஆய் நின்ற - என்னுடைய தேஹாதியநு பந்திகளெல்லாம் தானே யென்னலாம்படி நின்ற
இன்னம் போவேனே கொலோ - இனி இதுக்கவ்வருகு ஓர்டத்தேடிப் போக நினைப்பேனோ?

விளக்க உரை

எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார். கீழ்ப்பாட்டில் “என்னை முற்று முயிருண்டே” என்று சொல்லியிருக்கவும் மீண்டும் “என்னை முற்றுமுயிருண்டு” என்றருளிச் செய்கிறார்; இஃது அந்தாதித் தொடைக்காக அருளிச்செய்வதன்று. உண்டு என்றொரு சொல்லையிட்டுத் தொடங்கினாலும் அந்தாதித் தொடைக்கு அமையுமே. மறுபடியும் “என்னை முற்றுமுயிருண்டு” என்கையாலே, ஆழ்வாரை யநுபவிக்கை எம்பெருமாளுக்குப் பெறாப்பேறு பெற்றதாயிருக்கையாலே, அதையறிந்துகொண்டு தெகுடாடிச் சொல்லுகிறபடி. இங்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார் - “*யஸ்ய ஸா ஜநகாத்மஜா - அப்ரமேயம் ஹி தத் தேஜ:* என்கிற ஏற்றத்தோபாதியும் போருமாய்த்து இவருயிரை எங்கும் புக்கு அநுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம்” என்று. இதன் கருத்தாவது - எம்பெருமாளுக்கு லஷ்மீ ஸம்பந்தத்தினால் எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு ஏற்றம் ஆழ்வாரை யநுபவிப்பதனால் உண்டு என்பதாம். என் மாயவாக்கை - என்னுடைய ஆத்ம வஸ்துவை யநுபவித்து அவ்வளவோடே பரியாப்தி பெறுபவனாயிருந்தானோ? *அழுக்குடம்பு என்றும் *பொல்லா வாக்கை யென்றும் சொல்லுகிறபடியே ஹெயமென்று இவர்தாம் அருவருத்து இகழா நிற்கச் செய்தே அவன் இதில் பரமபோக்யதாபுத்திபண்ணி மேல்விழா நின்றான். என்னை முற்றும் தானேயாய் - இப்படி ஆத்மவஸ்துவிலும் அசித்தான தேஹத்திலும் புக்கு வியாபிக்கையாலே தானே யென்னத் தட்டில்லை. நான் என்னும்படியான ஆத்மவஸ்துவும், என்னது என்னும்படியான தேஹமும் தனிப்படக் காணமுடியாததாகி அவனேயென்ன நின்றதாயிற்று. ஆக இப்படியாயிரா நின்றமாயவம்மான் விரும்பி வர்த்திக்குமிடமான திருமாலிருஞ்சோலை மலையுள்ளதிக்கை நோக்கிக் கைகூப்பப் பெற்றேன்; அதாவது, அவனை யுகந்து, அவ்வழியாலே அவன் விருமபினதேசத்தை யுகந்து, அத்தோடு ஸம்பந்தமுடைய திக்கை யுகந்து இப்படி ஸம்பந்தி ஸம்பந்திகள் வரையிலும் உகப்பு பெருகிச் செல்லும்படி அவகாஹித்தேன். இப்படிப்பட்ட நான், இன்னம் போவேனே கொலோ!-இத்திருமாலிருஞ் சோலையுள்;ள திசைக்கு அப்பால் வேறொரு போக்கிடமுடையேனோ?

English Translation

My Lord resides in Malirumsolai devouring me. He entered my wondrous speech, then made me all himelf. How great is his grace! I told my hands in worship, need I say more?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்