விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தானே ஆகி நிறைந்து*  எல்லாஉலகும் உயிரும் தானேஆய்* 
    தானே யான்என்பான்ஆகி*  தன்னைத் தானே துதித்து*  எனக்குத்-
    தேனே பாலே கன்னலே அமுதே*  திருமாலிருஞ்சோலைக்* 
    கோனே ஆகி நின்றொழிந்தான்*  என்னை முற்றும் உயிர்உண்டே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் உயிரை முற்றும் உண்டு - என்னை ஸர்வப்ரபாரத்தாலும் புஜித்து
தன்னை தானே துதித்து - தன்னை (நான் துதித்ததாக வைத்துத்) தானே துதி செய்து
தானே ஆகி நிறைந்து - தானோருவனே நிறைவு பெற்றவனாய்
எல்லா உலகும் உயிரும் தானே ஆய் - ஸமஸ்த லோகங்களும் அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களும் தானே யென்னலாம்படி அவற்றுக்கு அந்தராத்மாவாய்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே - எனக்குத் தேனும் பாலும் கன்னலு மமுதுமான ஸகலவித போக்யமும்

விளக்க உரை

ஆழ்வார் தம்மோடு கலந்தபின் எம்பெருமாளுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக்கண்டு இனியராகிறார் இப்பாட்டில். பாட்டின் முடிவிலேயிருக்கிற “என்னை முற்றுமுயிருண்டு” என்பதைப் பாட்டினடியிலே கொண்டு கூட்டிக்கொள்வது. என்னைமுற்றுமுயிருண்டு தானேயாகிநிறைந்து - என்னை ஸர்வப்ராகாரத்தாலும் பாரிபூர்ணமாக புஸ்ரீரித்துத் தானே பாரிபூர்ணனானான்; இருதலை ஒன்று சேர்ந்து பாரிமாறப் புகுந்து ஒரு தலையை ஒன்றுமில்லையாக்கி ஒரு தலையை பூர்ணமாக்கிக் கொள்வது நியாயமோ? எல்லாவுலகு முயிரும் தானேயாய் - அவன்தான் ஸர்வேச்வரனானதும் என்னை முற்றுமுயிருண்டபிறகே. உண்மையில் எம்பெருமான் ஆழ்வார்திருவாக்கில் புகுந்து புறப்படவில்லையாகில் அவன் ஸர்வேச்வரனென்று பேர்பெற முடியாதே. குதர்க்கிகளான துர்வாதிகள் தாம் தாம் கொண்ட தெய்வங்களைப் பரதெய்வமாகப் பேசி நிறுத்த, ஸ்ரீமந்நாராயணன் நான் தெய்வமல்லேன்’ என்று பிற்காலிட்டே கிடந்தான்; ஆழ்வார் திருவவதாரித்து *திண்ணன் வீடு* ஒன்றுந் தேவு முதலான திருவாய்மொழிகளில் எம்பெருமானே பரதத்துவ மென்பதைக் கல்வெட்டாக ஸ்தாபித்தருளினபடியாலே, இதற்குப் பிறகே எம்பெருமான் தன்னை ஸர்வேச்வரனாகச் சொல்லிக்கொண்டு வெளியேறியுலாவ முகம்பெற்றான். ஆகவே “தானே யாகி நிறைந்து எல்லாவுலகுமுயிருந்தானேயாய்” என்றது பொருந்தும். யானென்பான் தானேயாகி - நானென்று நாமமாத்திரமான நான் அவன்தானென்னலாம் படியானேன். அதாவது, பரதந்திரரான தம்மை அவன் ஸ்வாந்திரராக்கி, இவாரிடத்திலே தான் பாரதந்திரியம் வஹிக்கலானான் என்கை. இங்கே ஈடு :- “தம்மைத் தடவிப்பார்த்த விடத்தில் காண்கிறிலர்; அவன் தலையாலே சுமக்கக் காண்கிறவித்தனை” என்று. தன்னைத்தானே துதித்து - எம்பெருமான் துதிக்கு விஷயபூதன் மாத்திரமல்லன்; ஸ்துதிக்குக் கர்த்தாவும் அவனேயாயிற்று. *குருகூர்ச்சடகோபன் சொல்* என்று நான் சொன்னதாகச் சொல்லிவைத்ததும் அவனேயாயிற்று. அவன் யாவனென்னில்; தன்னுடைய அநுபவம் எனக்குப் பரமபோக்யமாவதற்காக எனக்குத் தேனாகவும் பாலாகவும் கன்னலாகவும் அமுதமாகவும் நின்ற திருமாலிருஞ் கோலைக்கோன். இப்படி நான் ரஸித்துப் பருகவேண்டிய அமுதம் என்னை முற்றுமுண்டதே!

English Translation

Becoming me he became the worlds and the souls and filled them, then himself too became this me and praised himself. Sweet as honey, milk and sugarcane sap, my Lord of Malirumsolai –he became all these after devouring my soul

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்