விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
    வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*
    பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடு நரகம் புகல் ஒழித்த - கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த
செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும் - கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை
வாட்டாறு எம்பெருமானை - திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து
வளம் குருகூர் சடகோபன் - ஆழ்வார் (அருளிச்செய்த)
வானவர்கள் கேட்டு ஆரா - நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள்.

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று. தன் கனை கழல்கள் காட்டி - திருவடியைச் சொன்னது திருமேனிக்கும் உபலஷணமாகும். தன் ஸ்வரூபரூப குணவிபூதிகளை ப்ரகாசிப்பிக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தைக் காட்டி யென்றபடி. கடுநரகம் புகலொழித்த - *பொய்ந் நின்ற ஞானமும்…. இந்நின்ற நீர்மையினியா முறாமை* என்று முதலில் அபேஷித்தபடியே செய்து தலைக்கட்டினபடி. ஆழ்வார் இந்த ஷேம ஸமாசாரத்தைத் திருவாட்டாற்றெம்பெருமான் முகமாகப் பெற்றதனால் “கடுநரகம் புகலொழித்த வாட்டாற்றெம்பெருமானை” என்கிறார். செவிக்கினிய செஞ்சொல் இப்பத்துங்கேட்டு வானவர்கள் ஆரார் - தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையைப் பாடிவிட்டு முடிவில் “இளைய புன் கவிதைக் என்றார்; இவர் அங்ஙனே பேசாமல் ‘செவிக்கினிய செஞ்சொல்’ என்கிறார், தம்மையும் உளுக்கினபடி. “என்னவிலின்கவி’ என்றாரே கீழும். நித்யஸூரிகள் இப்பதிகத்தை முக்தர் சொல்லக் கேளா நின்றால் ‘இன்னம் சொல், இன்னம் சொல்’ என்பர்களே யல்லது கேட்டவளவால் திருப்தி பெறார்களாம். இங்கிருந்து அங்குச் சென்றவர்களை (முக்தர்களை) நோக்கி நித்யஸூரிகள் ‘நிலவுலகத்திலிருந்து வருகிறீர்களே, அங்கு ஏதாவது விசேஷ முண்டாகில் சொல்லுங்கள்’ என்று கேட்பார்களாம்; ‘திருக்குருகூர்லே ஆழ்வாரென்றொருவர் அவதாரித்துத் தொண்டர்க்கு முதுண்ணச் சொல்மாலைகள் சொன்னார்; அவற்றைக் கற்ற பெருமையாலே இங்கு வந்தோம்; இதுவே விசேஷம்’ என்பர்களாமிவர்கள். அப்படியாகில் அத்திருவாய்மொழி யாயிரத்திலே ஒரு பதிகம் வேறொன்று தோன்றாமல் இப்பதிகந் தன்னையெடுத்துப் பாடுவர்களாம் முக்தர்கள். அப்போது அவர் படும்பாட்டைப் பார்க்க வேணும் என்று ஆழ்வார் உட்கண்ணாலே யறிந்து கூறுகிறபடி.

English Translation

This decad of the thousand songs by kurugur Satakopan on Tiruvattaru-Lor, -who shows us his feet and averts the disaster of Hell, -Is sweet poetry which will not satiate even the gods

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்