விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்* 
    நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*
    மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க* 
    கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலை மாடத்து வாட்டாறு - மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே
தாமரை கண் என் அம்மான் - புண்டாரிகாஷனான அஸ்மத் ஸ்வாமியாய்
அவு அணைமேலான் - சேஷசயனத்தின் மீது கண் வளர்ந்தருள்பவனாய்
என் நெஞ்சத்து - எனது நெஞ்சிலே
எம்பொழுதும் நிலை பேரான் - ஒரு போதும் நிலைபெயராது நிரந்தரவாஸம் செய்பவனாய்
மதம்மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் - மதமிகுதியினால் கொலையிலே முயன்ற குவலயாபீட யானையின் கொம்பை முறித்தவானான பெரு

விளக்க உரை

தாம்பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கியருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் - இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார் தாளிணைகள் தலைமேல - *நீயொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கணியாய்* என்று நான் பிரார்த்தித்தபடியே அழகிய திருவடிகாளலே என் தலையை அலங்காரித்தருளினான். தாமரைக்கண்ணென்னம்மான் - இஃது எழுவாய்போலே யிருந்தாலும், என்முன்னே நின்று தாமரைக் கண்களாலே குளிர நோக்கினானென்எங் கருத்துப்பட நின்றது. என் நெஞ்சத்து நிலைபேரான் - நெஞ்சைவிட்டுப் பேராதே நின்றாயிற்று இதெல்லாம் செய்தாகிறது. தலைமேலே நிற்கிறானென்பதும், முன்னே நின்று திருக்கண்களால் நோக்குகிறானென்பதும், நெஞ்சினுள்ளே பேராமல் நிறிகிறானென்பதும் பொருந்துமோ? ஏக காலத்திலேயா இவையெல்லாம் செய்கிறான்? என்று சங்கிப்பார்க்கு நம்பிள்ளை யருளிச்செய்வது காண்மின்; - “ஸௌபாரி ஐம்பது வடிவு கொண்டாப்போலே எம்பெருமான் ஆழ்வாரையநுபவிக்க அநேக விக்ரஹம் கொள்ளாநின்றான் - என்று. உபநிஷத்தில் பரியங்க வித்தையயிற் சொல்லுகிறபடியே முக்தாத்மா திருவனந்தாழ்வான்மேலே அடியிட்டு ஏறப்பெறுவதொரு பேறு உண்டு, அதை நினைத்தருளிச் செய்கிறார் - “மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான்” என்று. மலைகளைப் புடைபடத் துளைந்து நெருங்க வைத்தாற்போலே யிருக்கிற மாடங்களை யுடைத்தான திருவாட்டாற்றிலே திருவனந்தாழ்வான்மேலே திருக்கண் வளர்ந்தருள்பவன். அநுபவ விரோதிகள் பலவுண்டே, அவை என்னாயிற்றென்ன குவலயாபீட மதயானை பட்டது பட்டதாக வருளிச்செய்கிறார் ஈற்றடியில். மதம்மிக்க கொலை யானை மருப்பொசுத்ததைக் கூறும் முகத்தால் தம்முடைய விரோதிகளாகிற மதயானையை முடித்தமை கூறினாராயிற்று

English Translation

My lotus-eyed Lord will never leave my heart. The Lord of Tiruvattaru hill reclines on a serpent. He destroyed the rutted elephant by the tusk. His tinkling lotus feet are on my head.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்