விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து* 
    வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*
    மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்* 
    நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படைதொட்டான் - ஆயுதமெடுத்த பஷபாதியாய்
வல் நெஞ்சத்து இரணியனை - வலிய நெஞ்சையுடையனான இரணியாசுரனது
நம்பெருமான் - நமக்கு ஸ்வாமியானவன்
மார்பு இடந்த - மார்பை இருபிளவாக்கி முடித்தவனாய்
என் நெஞ்சத்துள் இருந்து - என்னெஞ்சினுள்ளே பொருத்தியிருந்து

விளக்க உரை

என்னெஞ்சத்துள்ளிருந்து - நெடுங்காலம் ஸம்ஸாரத்திலே விஷயாந்தரங்களிலே மண்டிக் கிழந்தமையாகிற தண்மைதோற்ற என்னேஞ்சு என்கிறார் ஆழ்வார்; ஆழ்வாருடைய மமகாரத்திற்கு இலக்கான வஸ்துவே நமக்கு உத்தேச்ய மென்றிருக்கும் எம்பெருமான் இவர் என்னெஞ்சு என்றதுவே ஹெதுவாக மேல்விழுந்து உள்ளே புகுந்தான்; மறுபடியும் வெளியே வந்தால் மீண்டும் உள்ளேபுக வழி கிடைப்பது அர்தாகுமோ வென்கிற அச்சத்தினால் அங்கேயே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருந்தான்; அப்படியிருந்து செய்வதென்? என்னில், இங்கு இருந்தமிழ் நூலினை மொழிந்து இப்படிப்பட்ட திருவாய்மொழியை யருளிச்செய்தானாயிற்று, “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்கிறார் ஒருகால்; மற்றொருகால் இத்தமிழ் நூலை அவன்மொழிந்தானாகச் சொல்லுகிறார்; உண்மைதானிருந்தபடி யென்னென்னில்; இரண்டும் உண்மையே. வடமொழி வேதத்தைபற்றிச் சொல்லுமிடத்து *அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா* என்றது. ‘அநாதிநிதநா’ என்று சொல்லி வைத்து ஸ்வயம்புவா உத்ஸ்ருஷ்டா வாக் என்றதில்லையோ? அதுபோலவே இங்குங் கொள்க. இப்படி திருவாய்மொழியைப் பேசி வெளியிடுவித்துக்கொண்ட குணம் பரத்வமன்று ஸௌலம்யமே யென்று காட்டிக்கொண்டு மேல் அருளிச்செய்கிறார் வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த - இங்கு இரணியன் மார்விடந்ததைச் சொல்லுவதில் நோக்கில்லை; சிறுக்குனுக்கு உதவினபடியைச் சொல்லுவதே விவஷிதம். சிறுக்குன் நினைத்தபடி செய்தவன் நான் சொன்னபடி செய்யானோ என்கைக்காக இது சொல்லிற்று. மன் அஞ்ச - *மலைபுரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய என்றபடி. பாண்டவர்க்காய்ப் படை தொட்டது - ஆயுதமெடேனென்று சொல்லிவைத்து ஆயுதமெடுத்தது. பெரியாழ்வார் திருமொழியில் *மன்னர் மறுக மைத்துனர்மார்க்கொரு தோரின்மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை* என்று ஒரு கதை யருளிச்செய்திருப்பதுண்டு; அதையும் இங்கு நம்பிள்ளை யெடுத்துக்காட்டியருளினர். அர்ஜுனனுடைய தேர்க்குதிரைகள் இளைத்தபோது, கடினமானவிடங்களிலும் நீர் நரம்பு அறியுமவனாகையாலே வாருணாஸ்த்ரத்தைவிட்டு அங்கே நீரை யுண்டாக்கிக் குதிரைகளை விட்டு நீரூட்டிப் புரட்டி யெழுப்பிக் கொண்டுபோனானென்பது கதை. இதைக் கண்ட எதிரரசர்கள் ‘இவனுடைய ஆச்ர்த பஷபாத மிப்படியிருக்கையாலே நாம் இவர்களை வெல்லுகை கூடுமோ!’ என்று குடல்மறுகினராகையாலே இங்கு மன்னஞ்ச என்றது.

English Translation

The Lord in Tiruvattaru tore Hiranya's wide chest with his nails; He battled for the Pandavas in the terrible Bharata war. He resides in my heart, gracing me with great Tamil songs. Out graceful Lord is indeed good to us. O Good heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்