விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
    கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*
    பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
    நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாரணனை - ஸ்ரீமந் நாராயணனை
நண்ணினம் - கிட்டப்பெற்றோம்
கேசவன் எம்பெருமானை - கேசவனான பெருமானை
பாட்டு ஆயபலபாடி - பாட்டானவை பலவும்பாடி
மடநெஞ்சே கேட்டாயே - நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே.

விளக்க உரை

ஆழியானருள் தருவானமைகின்றான்” என்று எம்பெருமான் அருள் செய்வதாகச் சொல்வதற்கு இங்கு விஷயமில்லையே; ‘பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு மந்நின்ற நீர்மையினி யாமுறாமையென்று அடிதொடங்கியே நீர் பிரார்த்தித்தவரன்றோ. பலகால் நிர்ப்பந்தித்துக் கேட்டதற்குப் பலன்பெற்றால் அது அருள் பெற்றதாகுமோ? என்று நெஞ்சுகேட்க அதற்கு விடையிறுக்கிறாராழ்வார் - அறிவிலியான நெஞ்சே! நாம் அபேஷித்தது எவ்வளவு? பெற்றது எவ்வளவு? என்று ஆராயமாட்டிற்றிலையே; இப்போது எவ்வளவு பெற்றோமோ அவ்வளவும் முன்பு அபேஷித்திருக்கிறோமாவென்று சிறிது விமர்சித்துப்பார். பொய்ந்நின்ற ஞானம் போகவேணும், பொல்லாவொழுக்கு கழியவேணும், அழுக்குடம்பு தொலையவேணும் என்று இவ்வளவே யன்றோ நாம் இரந்தது. அதாவது விரோதிகள் கழியவேணுமென்று இவ்வளவு மாத்திர மன்றோ நாம் வேண்டினது. நாம் பெற்றது இவ்வளவேயோ? பழைவினைகள் பற்றறுவதற்கு மேற்பட, பாட்டாயபலபாடப்பேற்றோம், நாட்டாரோடியல்வொழியப் பெற்றோம்; நாரணனை நண்ணப்பெற்றோம்; இவ்வளவும் அவனருள் பலித்தபடியன்றோ; இதை நன்கு உணர்ந்து பாராய் நெஞ்சே! என்று சொல்லும் முகத்தால் தாம்பெற்றபேற்றின் கனத்தைப் பாராட்டிக் கூறுகிறாராயிற்று. மாஞாலப்பிறப்பறுப்பான் வாட்டாற்றானடிவணங்கி - எம்பெருமானையடி வணங்கி நாம் பிரார்த்தித்தது மாஞாலப்பிறப்பறுப்பது மாத்திரமே; மற்றொன்றன்று. ஆயிரம் நாம்பெற்ற பேறுகாணாய். “கேட்டாயேநெஞ்சே” என்பது ஆனந்தமேலீட்டால் சொல்லுகிற வார்த்தை. கேட்டாயே யென்றது - நன்றாக ஆராய்ந்துபார் என்றபடி. நாம் பெற்றபேறு என்னவெனில், கேசவனெம்பெருமானைப் பாட்டாயபலபாடி - தன்னுடைய குழலழகைக் காட்டி நம்மையடிமைகொண்டான்; *பாலேய் தமிழாரிசைகாரர்பெறாப்பேறன்றோ? பச்சைப்பசும்பொய்கள் பேசி மானிடத்தைக் கவிபாடுவார் மலிந்தவுலகில் *என்னானையென்னப்ப னெம்பெருமானைக் கவிபாடப் பெற்றதும், அதுதானும் ஒருநூறு இருநூறன்றிக்கே ஆயிரமாகப் பாடப்பெற்றதும் நாம் வேண்டிப்பெற்றதோ? இதற்குமேலே, நாட்டாரோடியல்வொழிந்து - உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரோடு ஸங்கம் ஒழியப்பெற்றபடி கண்டாயே;; “யானேயென்றனதே” என்று அஹங்காரமமகாரவச்யராயிருக்குமிந்த நாட்டாரோடு ஸங்க மறுகை ஸாமான்யமானதோ? இதற்கும்மேலே, நாரணனை நண்ணினமே - ஔபாதிகபந்துக்களைவிட்டு நிருபாதிகபந்துவான நாராயணனையே ஸகலவிதபந்துவுமாக நண்ணப்பெற்றோம். இவ்வளவும் நாம் இரந்து பெற்றதன்றிக்கே அவனருள் பலித்தபடிகாண் - என்றாராயிற்று.

English Translation

Singing songs and worshipping kesava of Tiruvattanu, we have ended karmic attachments and worldly connections, we have attained the feet of Narayana who cuts rebirth. Do you hear. O Frail heart?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்